புத்தளத்தில் கடும் காற்று - வீடுகள் சேதம்
புத்தளம், கருவலகஸ்வெவ மற்றும் வண்ணாத்திவில்லு பகுதிகளை ஊடறுத்து வீசிய கடும் காற்று காரணமாக 7 வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.
இந்த பகுதிகள் ஊடாக நேற்று மாலை பலத்த மழையுடன் கடும் காற்று வீசியதாக இடர் முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.
சம்பவத்தில் பாதிப்புற்றவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான நடவடிக்கைகளை பிரதேச செயலாளர்கள் ஊடாக மேற்கொண்டு வருவதாக இடர் முகாமைத்துவ நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.
.jpg)
Post a Comment