Header Ads



யாழ்ப்பாண முஸ்லிம்களின் வரலாறு மற்றும் விபரக்கொத்து திரட்டும் பணி


யாழ் முஸ்லிம் மறுமலர்ச்சி இயக்கம் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்ட மக்களிடமிருந்து பெருமளவிலான விபரங்களை திரட்டியுள்ளது. இந்த விபரங்களை சரிபார்த்து கேவைப்படுத்தும் நிகழ்வு கடந்த ஞாயிறன்று முஹம்மத் கௌஸ் ஜமீல் ஹாஜியாரின் வீட்டில் இடம்பெற்றது. 

இதேவேளை ஜே.எம்.ஆர்.ஓ வின் ஆலோசகர்களின் விபரங்களையும் மக்களுக்கு தெரிவிப்பதன் ஊடாக விபரங்களை விரைவாகவும் பூர்த்தியாகவும் பெறமுடியும் என நம்பப்படுகிறது. அஸ்செய்க் பஸீர் அப்துல்லாஹ் பாயிஸ் மௌலவி, எம்.ஏ.சி.பளீல், அப்துல் சலாம் (ஓய்வு பெற்ற பிரதி கல்வி பணிப்பாளர்), எஸ்.ஏ.சி. இனனு (ஓய்வு பெற்ற கல்வி பணிப்பாளர்), ஏ.சி. நஜுமுதீன் (ஓய்வு பெற்ற ஆசிரியர்) எம்.எஸ்.எல்.எம். சாஹுல் ஹமீத் (ஓய்வு பெற்ற அதிபர்), எம்.எம்.ஜலால் (ஓய்வு பெற்ற அரசாங்க உத்தியோகத்தர்), அல்ஹாஜ் எஸ்.எச். நியாஸ், அல்ஹாஜ் எம்.ஜி.எம்.ஜமீல், எஸ்.ஏ.சி.நஜீப் ஹாஜி, மலீக் ஹாஜி, அல்ஹாஜ் எம்.ஜி.எம்.ஜஸீல், எம்.எஸ்.எம். முக்தார் (ஓய்வு பெற்ற பிரதி கல்வி பணிப்பாளர்), எஸ்.ஏ.சி.மஹ்ரூப் அப்துல்காதர் (ஓய்வு பெற்ற ஆசிரியர்), எம்.ஏ.ஆர்.ஏ.றஹீம் (ஓய்வு பெற்ற கல்வி பணிப்பாளர்) ஆகியோர் இந்நிருவனத்தின் ஆலோசகர்களாகவும் மலர்க்குழுவின் முக்கிய உறுப்பினர்களாகவும் உள்ளனர். 

யாழ் முஸ்லிம் மறுமலர்ச்சி இயக்கம் யாழ்ப்பாண முஸ்லிம்களின் புராதன, இடைக்கால மற்றும் இடம்பெயர்வுக்கு பின்னரான வரலாறுகளைகளையும் மக்களின் தகவல்களையும் உள்ளடக்கிய நூலொன்றை வெளியிடவுள்ளது யாவரும் அறிந்ததே. இதற்காகவேண்டி யாழ்ப்பாணத்தில் வாழ்ந்து மறைந்த தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களின் விபரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளது. ஆலிம்கள், ஆலிமாக்கள், மௌலவிகள், காரிகள், வைத்தியர்கள், நிர்வாக சேவை உத்தியோகத்தர்கள், ஆசிரியர்கள், ஆசிரியைகள், பட்டதாரிகள், மாணவ பட்டதாரிகள்,ஆயுர்வேத, ஜுனானி வைத்தியர்கள், சட்டத்தரணிகள், கணக்காளர்கள், என்ஜினியர்கள், காதிகள், திருமணப்பதிவாளர்கள், விளையாட்டு வீரர்கள் (உதைப்பந்தாட்டம், கிறிகட், கூடைப்பந்து, மரதன், ஓட்டப்போட்டிகள்), கராட்டே, சிலம்படி, ஜுடோ மற்றும் எத்துரையிலாவது பிரகாசித்தவர்கள், பங்களிப்பு செய்தவர்கள் தமது விபரங்களை ஆராயப்பட்ட போது இன்னும் சில விபரங்கள் கிடைக்கப்பெறாமல் இருப்பது அறியப்பட்டுள்ளது. எனவே இறுதியாக ஒரு வேண்டுகோள் விடப்பட வேண்டுமென்ற ஆலோசனை சபையோரால் முன்வைக்கப்பட்டது. 

இது சம்பந்தமான கூட்டங்கள் ஏற்கனவே  புத்தளம், வவுனியா, அனுராதபுரம், நீர்கொழும்பு, கொழும்பு, பாணந்துறை போன்ற பிரதேசங்களில் நடத்தப்பட்டு மக்கள் தங்கள் விபரங்களை தந்துள்ளார்கள். 

புலம் பெயர் யாழ்ப்பாண முஸ்லிம்களில் சிலரும் உள்நாட்டில் வாழும் ஒரு சிலருமே இன்னும் தகவல்களை தராமல் உள்ளனர். பல இலட்சக்கணக்கான ரூபாய்கள் செலவழிக்கப்பட்டு செய்யப்படும் இந்த முயற்சிக்கு எல்லோரும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்பதே எங்களின் எதிர்பார்ப்பு. எனவே உலமாக்கள், ஆசிரியர்கள், அரச உத்தியோகத்தர்கள்,அதிபர்கள்,பட்டதாரிகள்,  உதைப்பந்தாட்ட, கிறிகட் விளையாட்டு வீரர்கள் மற்றும் சாதனையாளர்கள் மற்றும் வரலாற்றுத் தகவல்களை தரக் கூடியவர்கள் உடனடியாக தங்களது பெயர், முகவரி, கல்வித் தகைமை, தொழில் மற்றும் தாம செய்த சாதனைகள் அல்லது சமூகத்துக்கான பங்களிப்புகள் என்பவற்றை குறிப்பிட்டு தமது போட்டோ ஒன்றையும் இணைத்து அனுப்புமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம். ஈமெயில்  jmrojaffna@gmail.com

மேலும் யாரிடமாவது யாழ்ப்பாணம் சம்பந்தப்பட்ட பழைய வீடியோக்கள் இருக்குமாயின் அவற்றையும் எமக்கு தந்துதவலாம். தயவு செய்து இந்த தகவல்களை தமது நண்பர்கள் உறவினர்களுக்கு எடுத்துச் சொல்லவும். 



No comments

Powered by Blogger.