பன்னூலாசிரியர் எஸ்.எச்.எம்.ஜெமீலுக்கான பாராட்டு விழா (படங்கள் இணைப்பு)
(ஏ.எல்.ஜுனைதீன்)
முதுபெரும் கல்விமான், நிர்வாகி, ஆய்வாளர், மேடைப் பேச்சாளர், பன்னூலாசிரியர் அல்ஹாஜ் எஸ்.எச்.எம்.ஜெமீல் அவர்களுக்கான பாராட்டு விழா மற்றும் ஒரு கிராமத்து சிறுவனின் பயணம் எனும் அவரது ‘வாழ்வியல்” நூல் வெளியீட்டு விழா என்பன இன்று 10 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் தெஹிவளையில் அமைந்துள்ள சஹரான் மண்டபத்தில் நடைபெற்றது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசியத் தலைவரும் நீதி அமைச்சருமான அல்ஹாஜ் ரவூப் ஹக்கீம், ஆளுநர் அல்ஹாஜ் அலவிமெளலானா, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ரி.ஹஸனலி, நாடாளுமன்ற உறுப்பினரான முத்தலிப்பாவா ஆகியோர் இவ் விழாவில் கலந்து கொண்டு பாராட்டுப் பெற்ற எஸ்.எச்.எம்.ஜெமீல் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து கெளரவித்தார்கள். இவ்விழாவில் எஸ்.எச்.எம்.ஜெமீல் அவர்களின் ஒரு கிராமத்துச் சிறுவனின் பயணம். எனும் வாழ்வியல் நூலும் வெளியிட்டு வைக்கப்பட்டது. இதன் முதல் பிரதியை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் வெளியீட்டு வைத்தார்.








Post a Comment