Header Ads



பிலிப்பைன்ஸை ஹையான் தாக்கியபோது தப்பியோடிய கைதிகள்..!


பிலிப்பைன்ஸ் நாட்டில், புயலில் சேதமடைந்த சிறையிலிருந்து, கைதிகள் தப்பி ஓடி விட்டனர். பிலிப்பைன்ஸ் நாட்டில், சமீபத்தில் தாக்கிய பயங்கர புயலால், 10 ஆயிரம் பேர் இறந்து விட்டதாக அஞ்சப்படுகிறது. 

எதிர்பார்த்ததை விட, 350 கி.மீ., வேகத்தில் வீசிய புயல் காற்றால், லெய்டி என்ற மாகாணம், மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த மாகாண தலைநகர் டக்ளோபானில், உள்ள சிறையும், புயலால் சேதமடைந்தது. 

இதை பயன்படுத்தி, சிறையில் இருந்த, 600 கைதிகளில், பெரும்பாலானவர்கள் தப்பி ஓடி விட்டனர். தப்பிய கைதிகளை தடுக்கும் முயற்சியில், அங்கிருந்த போலீசார், துப்பாக்கியால் சுட்டும் பலனில்லை. புயல் நிவாரண பணியில் ராணுவத்தினரும், போலீசாரும் ஈடுபட்டுள்ளதால், தப்பிய கைதிகளை தேட முடியாத நிலை உள்ளது. "புயலால் முற்றிலும் சேதமடைந்துள்ள நகரில், தப்பிய கைதிகள் எங்கு சென்று தங்குவார்கள்; எதை சாப்பிடுவார்கள்'என, கவலைப்படுகிறார் சிறை அதிகாரி.

No comments

Powered by Blogger.