அக்குறணை குருகொடை ஆண்கள் பாடசாலையில் இடம்பெற்ற பொலிஸாரின் நடமாடும் சேவை
அலவத்துகொடை பொலீஸார் ஒழுங்கு செய்த பொலிஸாரின் நடமாடும் சேவை ஒன்று இன்று 2013 11 02 அக்குறணை குருகொடை ஆண்கள் பாடசாலையில் இடம் பெற்றது.
குருகொடையை அன்மித்த கிராமங்களில் வசிக்கும் பொது மக்களுக்கு தத்தமது தெவைகளை பூர்த்தி செய்து கொள்ளவதற்கு இன் நடமாடும் சேவையிள் மூலம் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டிருந்தன.
மருத்துவ முகாம், கண் பரிசோதணையும் மூக்குக் கண்ணாடிகள் வழங்குதல், மத்தியஸ்த சபை, பிரதேச செயலகம், பிரதேச சபை, மக்கள வங்கி, பைதுல் மால் நிலையம். உற்பட பல அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் தமது சேவைகளை மக்களுக்காக வழங்கின.
அக்குறணை பிரதேச செயலாளர் ஓ.எம்.ஜாபீர் உற்பட பல அதிகாரிகள் இதில் கலந்து கொண்டதுடன் அலவத்துகொடை பொலீஸ் நிலைய பொருப்பதிகாரி நிஷாந்த ஹெட்டியாரச்சி உற்பட பொலிஸ் நிலைய அதிகாரிகள் இன் நடமாடும் சேவையை ஒழுங்கு செய்திருந்தனர்.



Post a Comment