கத்தாரில் ஃபலாஹிகள் ஒன்று கூடல் (படம் இணைப்பு)
இலங்கையில் அறபு மற்றும் ஹரீஆத் துறை சார்ந்த கல்விப் பணி வரலாற்றில் தடம் பதித்துள்ள இஸ்லாமிய ஜாமிஆக்களில் பழமைவாய்ந்ததும் முன்மாதிரியானதுமான ஒன்றாகத் திகழும் காத்தான்குடி ஜாமிஅதுல் ஃபலாஹ் இன்று வரை பல ஆலிம்களையும் அல்குர்ஆனை மனனமிட்ட பல ஹாஃபிள்களையும் sவருகின்றமை ஈண்டு குறிப்பிடத்தக்க ஓர் அம்சமாகும்.
ஜாமிஅதுல் ஃபலாஹ் ஈன்றெடுத்த ஆலிம்கள் தலைசிறந்த தாஈக்களாகவும் பல்கலைக்கழக மற்றும் அறபுக் கலாபீடங்கள், அரச பாடசாலைகளில் விரிவுரையாளர்களாகவும் மஸ்ஜித்களில் கதீப்களாகவும் சமயப் பணியாற்றி வருகின்றனர்.
ஸஊதி அரேபியா, எகிப்து, சூடான், மலேசியா போன்ற நாடுகளில் தலைசிறந்து விளங்கும் சர்வதேசப் பல்கலைக் கழகங்களில் உயர் கல்வியை மேற்கொண்டு, பட்டம் பெற்ற பல ஃபலாஹிகள் உள்ளனர் என்பது ஒரு சிறப்பம்சமாகும்.
அத்துடன், தொழில் வாய்ப்பினைப் பெற்று கத்தாரில் வசிக்கும் 25 ஃபலாஹிகள், சென்ற வெள்ளிக்கிழமை ஜுமுஆத் தொழுகையைத் தொடர்ந்து ஷராட்டண் ஹோட்டல் பார்க்கில் முதன்முதலாக ஒன்று கூடி முக்கியமான பல விடயங்களை ஆலோசனை செய்ததுடன், தமது பல பசுமை நினைவுகளையும் பகிர்ந்து கொண்டனர்.
எனினும், இன்னும் பல முக்கியமான ஃபலாஹிகளுக்கு கலந்து கொள்ள முடியாமையினால், இரண்டாம் கட்ட சந்திப்பு நிகழ்வு ஒன்று இன்ஷா அல்லாஹ் மேற்படி ஷராட்டன் பார்க்கில் எதிர் வரும் 15-11-2013 வெள்ளிக்கிழமை ஜுமுஆத் தொழுகையைத் தொடர்ந்து இடம் பெறவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவிப்பதுடன், கத்தாரில் வசிக்கும் சகல ஃபலாஹிகளும் குறித்த சந்திப்பு நிகழ்வில் தவறாது கலந்து சிறப்பிக்குமாறும் மேற்படி தகவலைப் பகிர்ந்து கொள்ளுமாறும் கேட்டுக் கொள்கின்றனர்.
மேலதிக தகவல்களுக்கு :
Ø அஷ் ஷைக் எம். எச். எம் ஷுஜாஃ (ஃபலாஹி) 55480228
Ø அஷ் ஷைக் எம். எம். ஸஹாப்தீன் (ஃபலாஹி) 66712731
Ø அஷ் ஷைக் எம். ரீ. எம். இம்தியாஸ் (ஃபலாஹி) 66537667
Ø அஷ் கை; எம். பீ. எம். அஸ்பர் (ஃபலாஹி) 70132322
Ø அல் ஹாஃபிள் ஏ. எஸ். எம். ஷாக்கிர்(ஃபலாஹி) 77588354

Post a Comment