பாத்திரமொன்றிலிருந்து சிசுவின் சடலம் மீட்பு
(nf) வெலிகந்த - மஹவெவ பகுதியிலுள்ள வீடொன்றிற்கு அருகில், பாத்திரமொன்றிலிருந்து சிசுவொன்றின் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கிடைத்த தகவலொன்றுக்கு அமைய, இன்று பிற்பகல் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போதே இந்த சிசுவின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த சிசு, சில தினங்களுக்கு முன்னர் பிறந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த சிசுவின் தாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றமை குறித்து தகவல் கிடைத்துள்ளதாகவும், இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
.jpg)
Post a Comment