Header Ads



மேயர் பதவியிலிருந்து விலகக்கூடாது என மக்கள் தெரிவிக்கின்றனர் - சிராஸ் மீராசாஹிப்

(ஏ.எல்.ஜுனைதீன்)

மேயர் பதவியிலிருந்து எந்தக் காரணம் கொண்டும் விலகக்கூடாது என்று என்னை தெரிவு செய்த மக்கள் அழுத்தமாகத் தெரிவித்திருப்பதாக கல்முனை மேயர் சிராஸ் மீராசாஹிப் தெரிவிக்கின்றார்.

சிராஸ் மீராசாஹிப் கல்முனை மேயர் பதவி தொடர்பாக மேலும் கூறுகையில் தெரிவித்த்தாவது,

 நான் ஏற்கனவே தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களிடம் மேயர் பதவி சிராஸ் மீராசாஹிப் என்கின்ற தனி நபருக்கு தந்த பதவி அல்ல. இப் பதவி மக்கள் வழங்கிய ஆணைக்காக வழங்கப்பட்ட ஒரு பதவி. ஆகவே நான் மக்கள் முன் சென்று அவர்களின் கருத்துக்களைக் கேட்டறிந்த பின்னர்தான் உங்களிடம் இது சம்மநமாக கலந்தாலோசிப்பேன் என்று கூறிவிட்டுத்தான்  மக்களை சந்திக்கச் சென்றிருந்தேன்.

மக்களைச் சந்தித்து கதைத்தன் பின்பு  அவர்கள் ஆக்ரோசமாக நாங்கள் இரண்டு வருடங்கள் பதவி வகிப்பதற்காக உங்களுக்கு வாக்களிக்கவில்லை. நான்கு வருடங்கள் பதவி வகித்து சேவை செய்ய வேண்டும் என்பதற்காகவே வாக்களித்திருந்தோம் கட்சி எந்தக் காரணத்தைக் கொண்டும் உங்களை இராஜினாமாச் செய்யும்படி கோரக்கூடாது எனக் கூறியதுடன் மேயர் பதவியிலிருந்து எந்த ஒரு காரணத்திற்காகவும் விலகக் கூடாது என என்னைத் தெரிவு செய்த மக்கள் என்னிடம் அழுத்தமாகக் கூறியிருக்கிறார்கள். என்றார்.

6 comments:

  1. இத விட பிச்சை எடுக்கலாம் . வாக்கு மாறுபவன் முனாபிக். இனிமேல் உங்களை நயவஞ்சகன் சீரஸ் எண்டு கூப்புடலாம்

    ReplyDelete
  2. இதுக்கு எதுக்கு மக்களை இழுப்பான் ....சட்டப்படி நான்தான் தெரிவு செய்யப்பட்ட ஆள் என்னால் முடியாது அப்படின்னு சொல்லிட்டு போயிட்டு இருங்க MR முனாபிக் , நீங்க பதவி எடுக்கிறப்போ சொன்னிங்க 2 வருஷம் எண்டு அப்பவே உங்கட மானங்கெட்ட தலைவர்ட்ட சொல்லி இருக்கலாமே தந்தா முழுசா தாங்க இல்லன்ன வேணாண்டு ..........நீங்களும் உங்களும் தலைவரும்

    ReplyDelete
  3. நீங்க உண்மையாகவே பதவிக்கு ஆசை படுகிரிங்க இது உங்கள் அரசியல் வளர்ச்சிக்கி பெரும் தடையாக அமைந்து விடும்

    ReplyDelete
  4. முன்னாள் மேயரே!

    நான் உங்களிடம் ஒன்று கேட்கவேண்டும்.. இந்த மக்கள் என்று நீங்கள் ஏமாற்றுபவர்கள் நீங்கள் இரு வருட ஒப்பந்தத்திற்கு உடனபட்டபோது ஏன் வாய்க்குள் கொழுக்கட்டை வைத்திருந்தார்களா... பதவி வேண்டுமென்றால் எடுத்துக்கொள்ளுங்கள் தயவுசெய்து உங்கள் ஜால்ராக்களை மக்கள் என்ற பெயர் கொண்டு அழைக்க வேண்டாம்... எங்கள் மக்கள் விழித்துவிட்டார்கள்.. தலைமையையே இப்போது கண்டுகொள்வதில்லை..இதில் நீங்களென்ன நேற்று முளைத்த காளான்தானே...

    ReplyDelete
  5. pathavi moham pidithavarha

    ReplyDelete
  6. you are gonna end up your political life. will see next election who is your supporters.

    ReplyDelete

Powered by Blogger.