சவூதி அரேபியாவின் பொது மன்னிப்பு காலம் முடிந்தது - வெளியேறாத இலங்கையர்களுக்கு சிக்கல்
சட்டவிரோதமாக சவூதி அரேபியாவில் தங்கியிருக்கும் நபர்களை அந்நாட்டில் இருந்து வெளியேற வழங்கப்பட்டிருந்த பொதுமன்னிப்பு காலம் இன்றுடன் 03-11-2013 முடிவடைகிறது.
இந்த பொதுமன்னிப்பு காலத்தில் சவூதியில் சட்டவிரோதமாக தங்கியிருந்த சுமார் 10 ஆயிரம் இலங்கையர்கள் நாடு திரும்பியதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்தது.
சவூதியில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் இலங்கையை சேர்ந்த 16 ஆயிரம் பேர் இந்த காலப் பகுதியில் அங்கு இலங்கை தூதரகத்தில் தம்மை பதிவுசெய்து கொண்டுள்ளனர்.
இவர்களில் 4 ஆயிரம் பேரை சவூதி வழங்கிய பொதுமன்னிப்பு காலத்திற்குள் இலங்கைக்கு அழைத்து வர முடியாமல் போயுள்ளது. இதனால் சவூதி வழங்கியுள்ள நிபந்தனைகளுக்கு அமைய அவர்கள் அங்கு தங்கியிருக்க முடியாது. எனினும் அவர்களை மீள அழைப்பதில் சிக்கல்கள் இருக்கின்றன.
இதனால் சவூதி அரசுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி அவர்களை இலங்கைக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் குறிப்பிட்டுள்ளது.
.jpg)
Post a Comment