முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணி, இவற்றை கவனத்திற்கொள்ளுமா..?
முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணியினால் நடாத்தப்படும் யு.என்.எஸ்.சி.ஆர் 1325 வது பிரேரணை தொடர்பான மக்கள் மன்ற நிகழ்வும் ஊடகவியலாளர்களுடனான ஊடக அரங்கும் கல்முனை கிறிஸ்தா இல்ல மண்டபத்தில் இன்று 14.11.2013 பகல் 11.00 மணிக்கு நடை பெற்றது.
முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணியின் ஸ்தாபகர் கலாநிதி ஜெசீமா இஸ்மாயில் உட்பட சமய பெரியார்கள் கல்விமான்கள் ,பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலதரப்பட்டோர் கலந்து கொண்டனர்.
விழிப்பூட்டல் நிகழ்வுகளும் யு.என்.எஸ்.சி.ஆர் 1325 வது பிரேரணை தொடர்பான விளக்கவுரைகளும் இடம்பெற்றன .இதேவேளை விளிப்பூட்டல் நிகழ்வாக இடம் பெற்ற வில்லுப் பாட்டு கலாச்சார நிகழ்வு தொடர்பாக அங்கு உரையாற்றிய வைத்தியர் ஒருவரால் விமர்சிக்கப்பட்டது . வைத்தியர் விமர்சிக்கும் போது அங்கு இருந்த சிரேஸ்ட ஊடகவியலாளர் ஒருவர் குறித்த வைத்தியர் வைத்தியசாலை ஒன்றில் பெண் உரிமை மீறலை செய்தவர் என்றும் இந்த மேடையில் பேசுவதற்கு தகுதி இல்லாதவர் என்றும் முணு முணுத்தார் . அவரை இடையில் தடுப்பதற்கும் அந்த ஊடகவியலாளர் முயற்சி செய்தமை அவதானிக்கப்பட்ட விடயம்
இதேவேளை இன்றைய தினம் இந்த நிகழ்வில் கலந்து கொண்ட பலர் ஆஷுரா நோன்பு நோற்றவர்களாக இருந்தனர் .முஸ்லிம் அமைப்பொன்று இந்த தினத்தை ஒழுங்கு செய்தமை தவறு என்றும் சிலர் குறை பட்டுக் கொண்டனர் . அத்தோடு இன்றைய நோன்பு தினத்தில் அங்கு குளிர்பானம் ,பகல் போசனம் பரிமாறப் பட்டமையும் விமர்சிக்கப் பட்டன .எல்லாவற்றுக்கும் மேலாக இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்த இடம் போதாமையால் நிகழ்வின் இடையிடையே தடங்கல்களும் ஏற்பட்டன . ஊடகவியலாலர்களுக்கு கேள்வி கேட்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப் படவில்லைஎன்றும் ஊடகவியலாளர் ஒருவரால் தெரிவிக்கப் பட்டது
மிக முக்கியமான விடயமாக நிகழ்வின் ஆரம்பத்தில் சமயப் பெரியார்களின் சமயவளழி பாடுகள் இடம் பெற்றன பௌத்த சமயம் ,இந்து சமயம்,கிறிஸ்தவ சமயம் போன்ற சமயங்களை சார்ந்தவர்கள் சமய வழிபாடுகளை நடத்தினார்கள் எத்தனையோ மௌலவிமார்கள் இருந்த அவையில் குர் ஆன் வசனத்தை ஓத ஒருத்தர் கூட இல்லாமல் ஒலிபெருக்கியில் பதிவு செய்யப்பட்ட குர் ஆன் வசனம் ஒலிபரப்பப் பட்டது.
உரிமை பற்றிய விடயங்களை தெளிவு படுத்துவதற்கு முற்படுபவர்கள் சகலவிடயங்களிலும் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் இன்றைய முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணியினால் நடாத்தப்பபட்ட யு.என்.எஸ்.சி.ஆர் 1325 வது பிரேரணை தொடர்பான மக்கள் மன்ற நிகழ்வில் புலப்படுத்தப் பட்டுள்ளது .





இந்த அமைப்பு ஒரு முஸ்லிம் அமைப்பல்ல. பெயரை பார்த்து முஸ்லிம் அப்பாவிகளும் ஒரு சில லெப்பைகளும் ஏமாந்து விடுகின்றனர்.இது இஸ்லாத்துக்கு முற்றிலும் முரணான கொள்கைகளை கொண்ட ஒரு பெண்ணிலைவாத அமைப்பு.மேற்கு நாடுகள் சிலவற்றின் பிச்சையில் செயல்படுகிறது. எனவே இது குறித்து எச்சரிக்கையாக இருக்கவும்.
ReplyDelete