Header Ads



இளவரசர் சார்ள்ஸ் இலங்கை வந்தடைந்தார் - அமைச்சர்கள் குழாம் வரவேற்றது (படங்கள் இணைப்பு)

(எம்.ஜே.எம். தாஜுதீன்)

பொதுநலவாய உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரித்தானிய இளவரசர் சார்ள்ஸ் மற்றும் அவரது மனைவி கோன்வேல் சீமாட்டி ஆகியோர் இன்று (14) இன்று மாலை இலங்கையை வந்தடைந்தனர்.

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு விஷேட விமானம் மூலம் வந்திறங்கிய இளவரசர் சார்ள்ஸ் மற்றும் அவரது மனைவி கோன்வேல் சீமாட்டி ஆகியோரை சிரேஷ்ட அமைச்சர் சரத் அமுனுகம தலைமையிலான குழுவினர் வரவேற்றனர்.

இளவரசர் சார்ள்ஸ் தம்பதியினருக்கு  சிரேஷ்ட அமைச்சர்கள் விமான நிலையத்தில் வரவேற்பளி்த்தனர். நினைவுப் புத்தகத்தில் இருவரும் கைச்சாத்திட்டனர்.

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இளவரசர் சார்ள்ஸ் -இரண்டாவது எலிசபெத் மகா ராணிக்குப் பதிலாக பொதுநலவாய அரச தலைவர்களின் மாநாட்டை வைபவரீதியாக ஆரம்பித்துவைப்பார








No comments

Powered by Blogger.