Header Ads



கல்முனை பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கிடையிலான கலை கலாசார போட்டி விழா

(யு.எம்.இஸ்ஹாக்)

 அம்பாறை மாவட்ட செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட கல்முனை பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கிடையிலான கலை கலாச்சார போட்டி விழா 09-11-2013 சனிக்கிழமை கல்முனையில் நடை பெற்றது.

இக்கலை கலாச்சார போட்டி விழா கல்முனை இருதயநாதர் மண்டபத்தில் பிரதேச செயலாளர் எம்.எம்.நௌபல் தலைமையில்  நடை பெற்றது. அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே.விமலநாதன்  பிரதம அதிதியாக இந்த நிகழ்வில் கலந்து கொண்டார் .

கவிதை, நாட்டார்பாடல்,சினிமாப்பாடல், அறிவிப்பு, கதை சொல்லுதல்  நகைச் சுவைத் துணுக்கு ,மிமிக்கிரி, ஓரங்க நாடகம்,பேச்சு நடனம் போண்ற நிகழ்ச்சிகள் உத்தியோகத்தர்களிடையே போட்டிகளாக இடம் பெற்று பரிசுகளும் வழங்கி வைக்கப்பட்டன. 




No comments

Powered by Blogger.