தேசிய ஐக்கியம் என்பது பெரும்பான்மை சிங்கள மக்களின் பொறுப்பு - அமைச்சர் வாசுதேவ நாணயக்கார
தேசிய ஐக்கியம் என்பது பெரும்பான்மை சிங்கள மக்களின் பொறுப்பு என தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
அம்பாறையில் நடைபெற்ற கருத்தரங்கொன்றில் அவர் இதனை கூறினார். அவர் மேலும் கூறுகையில்,
தேசிய ஐக்கியம் இன்றி நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது. ஜனநாயகம் என்பது மக்களின் ஆட்சி. பெரும்பான்மையின் பொறுப்பு. பெரும்பான்மை என்பது பொறுப்பே தவிர வழங்கப்பட்ட உரிமையல்ல என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
Post a Comment