இந்தியப் பிரதமர் வரமாட்டார் - மஹிந்த ராஜபக்சவுக்கு கடிதமும் அனுப்பினார்
பொதுநலவாய மாநாட்டைப் புறக்கணிப்பது தொடர்பாக மகிந்த ராஜபக்சவுக்கு. இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் இன்று கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்காததற்கான காரணங்களை விபரித்தும், அதில் பங்கேற்க முடியாமல் போனதற்கு வருத்தம் தெரிவித்தும் இந்தக் கடிதம் எழுதப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பொதுநலவாய அமைப்பின் பெறுமானங்களைத் தாம் மதிப்பதாகவும், ஆனாலும், நிர்ப்பந்தங்களைக் கொடுக்கும் காரணிகளால் தன்னால் அதில் பங்கேற்க முடியவில்லை என்றும் இந்தக் கடிதத்தில் மன்மோகன்சிங் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் மன்மோகன்சிங் எடுத்துள்ள இந்த முடிவினால்,சிறிலங்கா - இந்திய உறவுகள் பாதிக்கப்படாது என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார்.
மன்மோகன்சிங்கிற்குப் பதிலாக, சல்மான் குர்ஷித் பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்கும் இந்தியக் குழுவுக்குத் தலைமை வகிக்கவுள்ளார்.
-
.jpg)
Post a Comment