Header Ads



தமது உரிமை குறித்து, இலங்கை ஓரின சேர்க்கையாளர்கள் பிரிட்டன் பிரதமரிடம் முறையீடு

ஓரின சேர்க்கையாளர்கள் தொடர்பில் பிரித்தானிய பிரதமர் தமது நிலைப்பாட்டை வெளியிடவேண்டும் என்று இலங்கையின் ஓரின சேர்க்கையாளர்கள் கோரியுள்ளனர். ஓரின சேர்க்கையாளர்களின் முன்னணி உரிமை காப்பு நடவடிக்கையாளரான சேர்மன் டி சில்வா, இது தொடர்பில் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு தகவல்களை வழங்கியுள்ளார்.

இதன்படி எதிர்வரும் கொழும்பு மாநாட்டில் இந்த விடயம் தொடர்பில் பிரித்தானிய பிரதமர் தமது நிலைப்பாட்டை விளக்க வேண்டும் என்று அவர் கோரியுள்ளார். இலங்கை, பிரித்தானிய ஆளுகைக்குள் இருந்தபோது 1892 ஆம் ஆண்டு ஓரினச்சேர்க்கை குற்றமாக பிரகடனப்படுத்தப்பட்டது. எனினும் பிரித்தானியாவில் 1967 ஆம் ஆண்டு ஓரினச் சேர்க்கை சட்ட அந்தஸ்தை பெற்றுள்ளது. இலங்கையில் இன்னும் அது. குற்றமாகவே கருதப்படுகிறது.

இது ஓரினச் சேர்க்கையாளர்கள் மற்றும் லெஸ்பியன் என்ற அரவாணிகள் இனத்தவர்களுக்கு இழைக்கப்பட்ட நீதியற்ற செயலாகும் என்று சேர்மன் டி சில்வா குறிப்பிட்டுள்ளார். இந்தநிலையில் தாம் தமது இனத்தவர்களின் உரிமைகள் குறித்து இலங்கை வரும் பொதுநலவாய நாடுகளின் தலைவர்களுடன் கலந்துரையாடல்களை நடத்தவுள்ளதாகவும் சேர்மன் குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

  1. நாடு இவ்வளவு சீரழிந்திருப்பது போதாக் குறைக்கு சேர்மன் டிசில்வா இன்னும் சீரழிக்கப் பார்க்கிறார் போலும். சேர்மன் டிசில்வாவின் மகன், மகள், தந்தை, மனைவி ஒவ்வொருவரும் ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவதை சேர்மன் டிசில்வா அங்கீகரிப்பாரா? இந்நாட்டில் இது போன்ற கயவகள் இருப்பதே கேவலம். சேர்மன் டிசில்வா இஸ்லாத்தை, அதன் ஒழுக்க நெறிகளை கொஞ்சம் படித்துப் பார்க்கட்டும்.

    ReplyDelete

Powered by Blogger.