பொதுநலவாய இளைஞர் பேரவைக்கு 4 இலங்கையர்கள், இருவர் முஸ்லிம்கள்
.jpg)
பொதுநலவாய இளைஞர் பேரவையின் தலைமைத்துவம் நைஜீரியாவின் அஹமட் அடாமிற்கு கிடைக்கப்பெற்றுள்ளது.
இளைஞர் பேரவைக்காக தெரிவு செய்யப்பட்ட நிறைவேற்றுக் குழுவில் 9 பேர் அடங்குவதுடன் அவர்களுள் நான்கு பேர் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பேரவையின் உப தலைவர் பதவிக்காக இலங்கையின் சதாம் சாஜஹான், மொஹமட் நுஸ்தி மற்றும் இந்தியாவின் சுதர்ஷனா லக்ஷ்மி ஆகியோர் மூன்று பிரிவுகளின் கீழ் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சதாம் சாஜஹான் இவ்வாறு கருத்து தெரிவித்தார் -
"இலங்கை அரசாங்கம் மற்றும் இளைஞர் விவகார அமைச்சுக்கு நான் முதலாவதாக நன்றிகளை தெரிவுத்துக் கொள்கிறேன். இவ்வாறானதொரு வெற்றிகரமான இளைஞர் மாநாடொன்றை ஹம்பாந்தோட்டையில் நடத்துகின்றமை தொடர்பில் நன்றி தெரிவிக்கின்றேன்"
Post a Comment