Header Ads



ஜனாதிபதி, காரில் ஏற தயாரானபோது, சனல்-4 ஊடகவியலாளர்கள்

(tm) சனல்-4 ஊடகவியலாளர்களை தேநீர் அருந்த வருமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார்.

ஜனாதிபதி, பொதுநலவாய வணிக அரங்கத்தை ஆரம்பித்துவைத்ததன்  12-11-2013 பின்னர் காரிலேறுவதவற்கு தயாரானபோது சனல்-4 ஊடகவியலாளர்கள் கேள்விகளை கேட்டனர்.

அக்கேள்விகளை கவனிகாது அவர்களை தேநீர் அருந்தவருமாறு சிரித்தவாறே ஜனாதிபதி கூறிவிட்டு சென்றுவிட்டார்.

இலங்கை வந்துள்ள சனல்-4 ஊடகவியலாளர்களை ஜனாதிபதி எதிர்கொண்டபோது தான் இலங்கையில் நடந்ததாக கூறப்படும் யுத்த குற்றச்சாட்டுகளை மனங்கொள்வதில்லையென கூறினார்.

ஊடகவியலாளர்கள், பாதுகாப்பு உத்தியோகதத்தர்கள் மற்றும் அவரது பாரிவாரங்களிடையே காணப்பட்ட ஜனாதிபதி
' இல்லை, நாம் அப்படியானவர்கள் அல்ல' என உரத்துக் கூறினார்.

சனல்-4 ஊடகவியலாளரான ஜொனதன் மில்லர் தாம் ஜனாதிபதியை சந்திக்க முடியுமா எனக்கேட்டபோது அவர் ஆம் என பதிலளித்தார்.
'அதற்கென்ன, நாம் தேநீர் விருந்தில் சந்திப்போம்' எனக் கூறினார்.

தன்னை பாதுகாத்து நின்ற பாதுகாப்பு ஊழியர்களை கடந்து அவர் வரமுயன்றபோது மில்லர் தனது குரலை உயர்த்தி தன்னை சனல்-4 ஊடகவியலாளர் என அடையாளப்படுத்தினார்.

பின்னர் ஜனாதிபதி, மில்லரை  நோக்கிவந்து கைகளை குலுக்கினார்.

மில்லருடன் சேர்ந்து நடந்த ஜனாதிபதி நாம் மீண்டும் சந்திப்போம் என்றார்.

சந்திப்புக்கு ஒத்துக்கொண்டதற்காக மில்லர் ஜனாதிபதிக்கு நன்றி கூறினார். ஜனாதிபதி தனது வாகனத்தில் ஏறியபோது, இந்திய பிரதமர் மன்மோகன் சிங் அவர்களின் பகிஷ்கரிப்பை பற்றிய கேள்வியை மில்லர் உரத்த குரலில் கேட்டனர்.

 ஜனாதிபதி இதற்கு பதில் கூறவில்லை. ஆனால் தான் ஊடகவியலாளர்களை சந்திக்கவிரும்புவதாக அவர் கூறியதை கேட்க முடிந்தது.

http://www.youtube.com/watch?v=Zl6fa0HPZNU

No comments

Powered by Blogger.