Header Ads



சம்மாந்துறை அமீர் அலி பொது நூலகத்தின் 30ம் ஆண்டு நிறைவையொட்டி புத்தக கண்காட்சி


(யு.எல்.எம். றியாஸ்)

சம்மாந்துறை  அமீர்  அலி பொது நூலகத்தின் 30ம்  ஆண்டு நிறைவையொட்டியும்,தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டும் மாபெரும் புத்தக கண்காட்சியும்,மாணவர்களுக்கான அறிவுத்திறன் போட்டி  நிகழ்சியும் (08.11.2013) வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

சம்மாந்துறை பிரதேச சபையின் ஏற்பாட்டில்  தவிசாளர் ஏ.எம்.எம். நௌசாத் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சம்மாந்துறை அனைத்து பள்ளிவாசல்கள் பிரதம நம்பிக்கையாளர் டாக்டர் எம்.வை.எம்.முஸ்தபா பிரதம அதிதியாக கலந்துகொண்டு நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்தார்.

இந்நிகழ்வின் போது  சம்மாந்துறை  அமீர்  அலி பொது நூலகத்தின் 30ம் ஆண்டு நிறைவையொட்டி நினைவு  மலர்  ஒன்றும்  வெளியிட்டு வைக்கப்பட்டது இதன் முதல்  பிரதியை    தவிசாளர் ஏ.எம்.எம். நௌசாத்  சம்மாந்துறை அனைத்து பள்ளிவாசல்கள் பிரதம நம்பிக்கையாளர் டாக்டர் எம்.வை.எம்.முஸ்தபாவிற்கு வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் கிழக்கு மாகான சபை உறுப்பினர் எம்.எல்.ஏ.அமீர்,சம்மாந்துறை
பிரதேச சபையின்  உறுப்பினர்கள் மற்றும் பல அத்திகள் கலந்து கொண்டனர்







No comments

Powered by Blogger.