Header Ads



பொதுநலவாய இளைஞர் தேர்தல் - 2 இலங்கை முஸ்லிம் இளைஞர்கள் களத்தில் குதிப்பு

ஹம்பாந்தோட்டை மாகம்புர றுகுணு சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றுவரும் பொதுநலவாய இளைஞர் பேரவை மாநாட்டின் முக்கிய நிகழ்வாக இன்று 12-11-2013 இந்தத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலுக்கான அபேட்சகர்களை அறிவிக்கும் நிகழ்வு நேற்றைய தினம் நடைபெற்றதுடன் 

இலங்கை அபேட்சகராக இளைஞர் பாராளுமன்ற செனட்டரும் ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவியுமான தாரிகா திலீபனி போட்டியிடவுள்ளார்.

இத் தேர்தலில் உப தலைவர்கள் மற்றும் பிராந்திய தலைவர்கள் பதவிக்காக இலங்கையிலிருந்து கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த விஜயானந்தன் மற்றும் துஷ்யந்தன், சதாம் சாஜஹான், மொகமட் ஹுஸ்னி ஆகியோரும் போட்டியிடுகின்றனர்.

பிராந்திய மற்றும் உப பிரிவுகளின் உப தலைவர்கள் பதவிக்கு இலங்கையைச் சேர்ந்த ராஜித ஹப்பு ஆரச்சி, கயான் சமீர ராஜபக்ஷ, தாரிகா திலீபனி, ஷிரோமி வத்சலா, அமில ராஜபக்ஷ ஆகியோரும் போட்டியிடுகின்றனர.

தலைவர் பதவி ஆபிரிக்க பிராந்தியத்துக்கு வழங்குவதாக ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பொதுநலவாய நாடுகளின் இளைஞர்கள் மாநாட்டில் (இன்று) 12ம் திகதி நடைபெறவுள்ள தேர்தல் தொடர்பில் நேற்று கலந்துரையாடப்பட்டது.

‘உங்கள் குரல்’ ‘உங்கள் வாக்கு’ என்ற தொனிப் பொருளில் கலந்துரையாடல் நடைபெற்றதுடன், தேர்தலில் போட்டியிடும் அபேட்சகர்களை அறிமுகம் செய்து வைக்கும் நிகழ்வும் நடைபெற்றது.

இளைஞர் தலைவர்களுக்கான பொறுப்புகள் தேசிய பிராந்திய ரீதியில் இளைஞர்கள் எதிர்கொள்ள நேரும் சவால்களை வெற்றிகரமாக எதிர்கொள்வது தொடர்பில் இந்த அமர்வீர் கருத்துக்கள் பரிமாறப்பட்டன. 

ஐக்கிய இராச்சியம், உகண்டா உள்ளிட்ட பல நாடுகளிலிருந்து கலந்து கொண்ட இளைஞர் பிரதிநிதிகள் பொதுநலவாய இளைஞர் பேரவையின் யாப்பு தொடர்பில் கேள்விகளை எழுப்பினர். 

யாப்பில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் ஏற்படுத்தப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டு கருத்துக்கள் பெறப்பட்டன. மேற்படி இளைஞர் பேரவை தேர்தலில் ஜமெய்க்கா நாட்டின் பல்கலைக்கழக பட்டதாரியான ஜெரோம் மேரியன் ருவான்ஸ், கிறேனெடா நாட்டின் ரொய்டன் பெஹாரி பாகிஸ்தானின் ஹனான் அலி அபாஸி, பங்களாதேஷின் பாரா காசி இக்பால் ஆகியோரும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர். 

No comments

Powered by Blogger.