Header Ads



இலங்கைக்கு 262 கிலோ கிராம் போதைபொருள் கடத்திய பாகிஸ்தானியர் காஷ்மீரில் கைது

சுங்க அதிகாரிகளினால் அண்மையில், 262 கிலோ கிராம் போதை வஸ்து கைப்பற்றப்பட்டமை தொடர்பில், சர்வதேச காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் மேலதிக விசாரணைக்காக இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் இதுவரை கைப்பற்றப்பட்ட பாரிய போதை வஸ்து கடத்தலாக கருதப்படும் இந்த கடத்தல் சுங்க அதிகாரிகளினால் கடந்த ஓகஸ்ட் மாதம் 8ஆம் திகதி முறியடிக்கப்பட்டது.

இது தொடர்பில் சர்தாரிபான் என்பவரை கைது செய்யுமாறு இலங்கை சர்தேச காவல்துறையினரிடம் கோரியிருந்தது.

இந்த நிலையில், சந்தேக நபர் பாக்கிஸ்தானிய காஷ்மீர் பகுதியில் கைது செய்யப்பட்ட நிலையில், அவர் சர்வதேச சட்டத்திற்கு அமைய இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ளதாக காவல்துறையின் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோகன தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.