Header Ads



20 பில்லியனுக்கும் மேற்பட்ட மக்களுக்கு தலைமை வகிக்கப் போகின்ற ஜனாதிபதிக்கு வாழ்த்துக்கள்

(ASM. Irshad)

பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்கள் மாநாடு இம்முறை இலங்கையில் நடைபெறுவதையும்  அதன்  தலைமைப் பொறுப்பை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஏற்கவுள்ளதையிட்டும் கொழும்பு ஊடகவியலாளர் சங்கம் தனது பாராட்டுக்களையும் நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறது.

54 நாடுகள் பங்கேற்கவுள்ள இம்மாநாட்டின் மூலம் இலங்கைக்கு பெயரும் புகழும் மட்டுமல்லாது பொருளாதார ரீதியில் முன்னேற்றமும் ஏற்படவுள்ளது. இது இலங்கை  மக்களுக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாகும்.  இதனையிட்டு நாம் மிகுந்த  மகிழ்ச்சியடைகின்றோம். மூன்று தசாப்தகாலமாக இலங்கையில் நிலவி வந்த பயங்கரவாதத்தை  ஒழித்து நாட்டு மக்கள் அனைவரும் சுதந்திரமாக நிம்மதி, சந்தோசத்துடன் வாழ்ந்து வருகின்றார்கள். இந்த நிலையில் இம்மாநாடு இலங்கையில் நடைபெறுவதனால் இலங்கைக்கே பல வழிகளிலும் நன்மைகள் கிடைக்கும்.

மேலும் பொதுநலவாய நாடுகளின் புதிய தலைமைப் பொறுப்பை இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஏற்பதன் மூலம் அவர் பொதுநலவாய நாடுகளின் 20 பில்லியன் மக்களின் தலைவனாக மாறுவதையிட்டு எமது வாழ்த்துக்களை நாம் ஜனாதிபதிக்கு தெரிவித்துக் கொள்கின்றோம்.

யுத்தத்தை ஒழித்து குறுகிய காலத்தில் பாரிய அபிவிருத்தியை மேற்கொண்டு சுபீட்சமான இலங்கையை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எவ்வாறு உருவாக்கி  கொடுத்தாரோ அதேபோன்று பொதுநலவாய நாடுகளைச் சேர்ந்த 20 பில்லியனுக்கும் மேற்பட்ட மக்களுக்கும் அவர் ஓர் சிறந்ததொரு தலைவராக விளங்கி அந்நாடுகளின் மக்களினால் போற்றப்படும் ஒரு தலைவராக திகழ்வார் என்பதில் நாம் முழுநம்பிக்கை கொண்டுள்ளோம்.

இலங்கையில் இம்மாநாடு நடைபெறுவதன் மூலம் தப்பான அபிப்பிராயங்கொண்டுள்ள பொதுநலவாய நாடுகளின் தலைவர்களுக்கு இலங்கையின் சரியான களநிலவரங்களை கண்டறியக்கூடிய சூழ்நிலையை ஏற்படுத்திக்கொடுப்பதுடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பற்றியும் இலங்கை பற்றியும் தப்பிப்பிராயங்கொண்ட தலைவர்களின் எண்ணங்களை மாற்றுவதற்கான களமாகவும் இம்மாநாடு அமையும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.   

எனவே இலங்கையர்களாகிய நாம் இம்மாநாட்டை முழுமனதுடன் வரவேற்பதுடன் இன, மத, கட்சி பேதமின்றி  ஒன்றிணைந்து  புதிய தலைமைப் பொறுப்பை ஏற்கவுள்ள ஜனாதிபதிக்கு பூரண ஆதரவை வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம். இலங்கையில் நடைபெறும் இம்மாநாடு வெற்றிபெறவும், நாட்டு மக்களின் வாழ்வில் சுபீட்சமும் முன்னேற்றமும் ஏற்படவும் நாம் பிரார்த்திக்கின்றோம். இவ்வாறு கொழும்பு ஊடகவியலாளர் சங்கம் விடுத்துள்ள தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செயலாளர், கொழும்பு ஊடகவியலாளர் சங்கம்

8 comments:

  1. Not 20 billion...2 billion.. now total world population is 7.65 Billion

    ReplyDelete
  2. இந்தப்பெருமை ஜனாதிபதிக்கு மட்டுமல்ல இலங்கைில் பிறந்த ஒவ்வொரு பிரஜைக்கும் உண்டு இம்மாநாட்டில் இருந்து நம் தாய் நாட்டு மக்கள் ஜாதி மத பேதம் இன்றி சகல இனமக்களும் ஒன்றிணைந்து நாட்டை கடடி எழுப்ப ஒற்றுமைபடுவோமாக.

    ReplyDelete
  3. Two billion and not twenty billion...

    ReplyDelete
  4. 20 billion is correct. Because all common wealth contries populations are included.

    ReplyDelete
  5. 20 billion is correct. Because all common wealth contries populations are included.

    ReplyDelete
  6. 20 பில்லியனா? ஒட்டு மொத்த உலக சனதொகையே இன்னும் 8 பில்லியனை தாண்டவில்லை பிரகு தேசத்தின் அதிபதி எங்கே இருக்கும் 20 பில்லியன் மனிதர்களுக்கு தலைமை தாங்கபோகிறார்? நூராயிரம் பத்து ஒரு மில்லியன் 10 மில்லியன் ஒரு கோடி 100 கோடிதான் ஒரு பில்லியன் அதாவது 1000 மில்லியன் ஒரு பில்லியன்? உலக சனத்தொகை 750 கோடியை தட்போதுதான் தாண்டி உள்ளது அதாவது உலக சனத்தொகை 7.5 பில்லியன்களாக தட்போதுதான் உயர்ந்துள்ளது உலக சனத்தொகையிலும் 12.5 பில்லியன் அதிகமானோருக்கா தேசத்தின் அதிபதி தலைமை ஏட்க போகிறார்?

    ReplyDelete
  7. இலங்கையர்களாகிய நாங்கள் இம்மாநாட்டை முழுமனதுடன் வரவேற்ப்பதிலோ வாழ்த்துக்கள் தெரிவிப்பதிலோ மாற்று கரத்துக்கள் இல்லை மாறாக நீங்கள் குறிப்பிட்டுள்ளதுபோல் இன மத கட்சி பேதமின்றி பொதுமக்கள் முழு மனதுடன் செயற்படுவது போன்று இலங்கை அரசும் இன மத மொழி கலாச்சார கட்சி பேதமின்றி அனைவரின் சுதந்திரத்திற்கும் முட்டுக்கட்டை போடாமல் நடந்து கொள்ள வேண்டும்

    ReplyDelete

Powered by Blogger.