Header Ads



கொழும்பு பொதுநலவாய மாநாட்டு வான வேடிக்கைக்காக 2 கோடியே 40 லட்சம் ரூபா செலவு

(Riswan Khalid)

கொழும்பில் ஆரம்பமாகவுள்ள பொதுநலவாய தலைவர்களின் மாநாட்டுக்காக (CHOGM 2013 ) வர்த்தக அமைச்சு சீனாவின்  Liuyang fuxiang fireworks group என்ற நிறுவனத்திடமிருந்து 133.500 டொலர் பெறுமதிமிக்க வான வேடிக்கை வெடிகளை இறக்குமதி செய்துள்ளதாக ராவய பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது. 

நவம்பர் 05 ம் திகதி உருகொடவத்த  ஆர் சி டி சுங்கத் திணைக்களத்தின் களஞ்சிய சாலையிலிருந்து வர்த்தக அமைச்சு இப்பொருட்களை  எடுத்துச் சென்றுள்ளதோடு இதற்காக 7876.000 ரூபா சுங்க வரியும் செலுத்தியுள்ளதாகவும் அந்தச் செய்தி மேலும் கூறுகிறது.

இதன்படி இறக்குமதி செய்யப்பட இந்த வான வேடிக்கைக்காக சுங்கத் தீர்வை உட்பட செலவு செய்துள்ள மொத்தத் தொகை 2 கோடியே 40 லட்சம் ரூபாவாகும்.


No comments

Powered by Blogger.