Header Ads



அம்பாறை மாவட்ட உணவகங்களில் சுகாதார சீர்கேடு - பொதுச்சுகாதார பரிசோதகர்கள் கவனிப்பார்களா..?

(யு.எல்.எம். றியாஸ்)

அம்பாறை  மாவட்டத்தில் உள்ள உணவகங்களில் சுகாதார சீர்கேடுகள் அதிகரித்த வண்ணமே காணப்படுகின்றது தற்போது உணவகங்களுக்கு சென்று  நாம் கொள்வனவு செய்யும் உணவுப்பண்டங்கள் பழைய பத்திரிகைகள், புத்தகங்கள் மற்றும் காலம் கடந்த கடதாசிகள் போன்றவற்றால் பொதிசெய்யப்பட்டு  விற்பனை செய்யப்படுகிறது இதனால் பாரிய சுகாதார சீர்கேடுகள்  இடம்பெற்று வருகின்றது

பெரும்பாலும் ஹோட்டல்களில் சிற்றுண்டிகள் உண்னச்செல்லும்  போது பாத்திரத்திற்கு மேல் பத்திரிகைகள் போடப்பட்டு சிற்றுண்டிகளை பரிமாறுவதற்கு தரப்படுகிறது  இப்பத்திரிகையானது பல  இரசாயன கலவை அடங்கிய நிரப்பொருடகளை கொண்டுள்ளதுடன்  தூசுகளையும் கொண்டுள்ளது இதற்கு மேல் உணவுகளை வைத்து பரிமாறும் நடவடிக்கையானது உணவுச் சுகாதாரத்தில் பாதிப்புக்கள் ஏற்பட வாய்ப்புண்டு இவ்வாறான நடவடிக்கைகள் பாடசாலையில் உள்ள சிற்றுண்டி சாலைகளிலும் வெகுவாக காணப்படுகின்றது நாமும் நமது பிள்ளைகளும் ஒவ்வரு நாளும் இரசாயன பதார்த்தங்களுடுடனே உணவுகளை தினமும் உட்கொள்ள வேண்டிய துர்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

இதுவிடயத்தில்  அம்பாறை மாவட்டத்தில் உள்ள  பொறுப்பு வாய்ந்த பொதுச்சுகாதார  பரிசோதகர்கள், மற்றும் இத்துறைக்கு பொறுப்பானவர்கள் தங்களது கவனத்தை செலுத்துவார்களா ? இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுத்து உணவுச் சுகாதாரத்தை உறுதி செய்ய முன்வருவார்களா ?

No comments

Powered by Blogger.