Header Ads



கட்டுகஸ்தோட்ட - உகுரஸ்ஸபிட்டிய பள்ளிவாசல் உடைப்பு

(மொஹொமட் ஆஸிக்)

கட்டுகஸ்தோட்ட உகுரஸ்ஸபிட்டிய பள்ளிவாசலை இன்று 26-10-2013  அதிகாலை இனம் தெரியாத நபர்கள் உடைத்துள்ளதாக கட்டுகஸ்தோட்ட பொலீஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இன்று அதிகாலையில் பள்ளி வாசலின் கதவு உடைக்கப்பட்டு பிரதான அரையின் கதவும் உடைக்கப்பட்டுள்ளதாக பொலீஸார் தெரிவித்தனர்.

பள்ளிக்குள்ளே ஆற்கள் வந்ததை முஅத்தினார் அவதானித்து ஒளிபெருக்கி மூலம் அறிவித்தததை தொடர்ந்து பள்ளிக்குள் வந்தவர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.

பள்ளிவாசலில் இருந்து  எவ்வத பொருளும் திருடப்படவில்லை என்று பொலீஸார் தெரிவிக்கின்றனர்.

4 comments:

  1. பள்ளிவாசல்கள் ஒன்றாவது உடைக்கப்படவில்லை என்று சொன்ன 'கௌரவ' காதர் ஹாஜியார் அவர்களே மற்றும் முஸ்லிம்களின் 'தலைவர்' என்று தன்னைத்தானே புகழ்ந்து கொண்டிருக்கும் 'கௌரவ' ரவுப் ஹக்கீம் அவர்களே.. இந்த பள்ளிவாசல் உடைப்பு சம்பந்தமாக ஒரு 'அறிக்கை'யாவது வெளியிடலாமே....????

    ReplyDelete
  2. பள்ளிவாசல்கள் ஒன்றாவது உடைக்கப்படவில்லை என்று சொன்ன 'கௌரவ' காதர் ஹாஜியார் அவர்களே மற்றும் முஸ்லிம்களின் 'தலைவர்' என்று தன்னைத்தானே புகழ்ந்து கொண்டிருக்கும் 'கௌரவ' ரவுப் ஹக்கீம் அவர்களே.. இந்த பள்ளிவாசல் உடைப்பு சம்பந்தமாக ஒரு 'அறிக்கை'யாவது வெளியிடலாமே....????

    ReplyDelete
  3. Pargahadeniyur Akram அவர்களே! நீங்கள் குறிபிட்டவர்கள் முஸ்லிம்களின் பள்ளிகள் தொடர்பில் பேச அவர்கள் முஸ்லிம்களா என்ற சந்தேகம் உள்ளது.முதலில் இந்த சந்தேகத்தை நிவர்த்திக்கும்படி அவர்களுக்கும் மற்றும் முஸ்லிம் பெயரில் இருக்கும் பாராளமன்ற உறுப்பினர்களிடமும் வினயமாக கேட்டுக்கொள்கிறேன்.

    ReplyDelete
  4. யாழ் முஸ்லிம் இலங்கையில் தடை செய்யப்பட்டுள்ளதால், இந்த செய்தி பல முஸ்லிம்களை சென்றடைய வில்லை. யாழ் முஸ்லிம் இன்னொரு டொமைன் இலும் தனது செய்திகளை வழங்க வேண்டும். இல்லாவிட்டால் முஸ்லிம் மக்கள் இதுபோன்ற செய்திகளை அறிய முடியாமல் போகின்றது, அத்துடன் யாழ் முஸ்லிமையும் மறந்து போகின்றார்கள்.

    ReplyDelete

Powered by Blogger.