சம்மாந்துறை பிரதேசசபை உறுப்பினர் முஸ்தபாவின் காருக்கு சேதம் விளைவிப்பு
(வி.ரி.சகாதேவராஜா)
சம்மாந்துறை பிரதேசசபை உறுப்பினரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினருமான சிரேஸ்ட சட்டத்தரணி எஸ்.எம். கார் வீட்டில் வைத்து சேதமாக்கப்பட்டுள்ளது.
கார் கராஜில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த சமயம் நள்ளிரவு வேளையில் இச்சம்பவம் இடம்பெற்றிருக்கலாமென சட்டத்தரணி முஸ்தபா பொலிசாரிடம் தெரிவித்தார்.
காரின் பின்புறக்கண்ணாடி அடித்து நொருக்கப்பட்டிருப்பதையும் அதனை அவரும் சகாக்களும் பார்வையிடுவதைப் படங்களில் காணலாம்.

Post a Comment