Header Ads



சபாநாயகர் பதவியே போதும் - பிரதமர் பதவி கிடைத்தால் நிராகரிப்பேன்

பிரதமர் பதவியை ஏற்பதில் தனக்கு ஆசையெதுவும் இல்லையென சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மேலும் அப்பதவி கிடைத்தாலும் அதனை நிராகரிக்கப்போவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தற்போது தான் வகிக்கும் சபாநாயகர் பதவியே தனக்கு போதுமெனவும் இது தொடர்பில் ஊடகங்களில் வெளியாகும் செய்தி தொடர்பில் தனக்கு எதுவும் தெரியாதெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிரதமர் பதவிக்கு தனது பெயரும் முன்மொழியப்பட்டுள்ளதாக தானும் ஊடகங்களின் ஊடாக தெரிந்துகொண்டதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். vi

1 comment:

  1. சபாநாயகர்அக இருந்து சேர்த்தது போதும் பிரதமர் தேவை இல்லை என்று நினனகிறார் போலும்

    ReplyDelete

Powered by Blogger.