Header Ads



கொழும்பு இசிபத்தான கல்லூரி, தமிழ் இலக்கிய மன்றம் ஏற்பாடு செய்திருந்த கலைவிழா


(ஏ.எஸ்.எம்.இர்ஷாத்)

கொழும்பு இசிபதன கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம் ஏற்பாடு செய்திருந்த கலைவிழா-2013 இன்று வியாழக்கிழமை மாலை தெஹிவளை எஸ்.டி.எஸ்.ஜயசிங்க மண்டபத்தில் நடைபெற்றது.

கல்லூரி அதிபர் ஏ.ஏ.சி.பெரேரா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராக பேராசியர் மா.கருணாநிதி கலந்து கொண்டார்.

இதன்போது இலக்கிய தாரகை 2013 சுவர்னியர் வெளியிட்டு வைக்கப்பட்டதுடன் போட்டி நிகழ்ச்சிகளில் பங்குபற்றி வெற்றியீட்டியவர்களுக்கான சான்றிதழ்களையும் பதக்கங்களையும் பிரதம அதிதி மற்றும் அதிபர் பிரதி அதிபர்கள் வழங்கினர். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.


No comments

Powered by Blogger.