Header Ads



ஏறாவூரிலிருந்து பிரதீபா பிரபா தேசிய விருது பெறுவதற்காக 4 ஆசிரியர்கள் தெரிவு

(அபூ பயாஸ்)

மஹிந்த சிந்தனையின் புனர்வாழ்வு திட்டத்துக்கு அமைய எதிர்கால சவால்களை வெற்றி கொள்ளக்கூடிய மாணவர் சமூகமொன்றை உருவாக்கும் முகமாக, பயன்மிக்க கற்றல் செயற்பாடுகளை முன்னெடுக்கும் அதிபர்கள்,ஆசிரியர்களால் வழங்கப்படும் அளவிலா சேவையை கௌரவிக்குமுகமாக "ஆசிரியர் பிரதீபா பிரபா " என்ற தேசிய விருது வழங்கி கௌரவிக்கப்படுகின்றது.

இவ்விருது வழங்கும் நிகழ்வுக்கு ஏறாவூர் அல் முனீரா பாலிகா மகா வித்தியாலயத்திலிருந்து அக்கல்லூரி அதிபர் அல்ஹாஜ் எம்.ஜே .ரபியுதீன் அவர்களும்,அதே பாடசாலையை சேர்ந்த ஆசிரியர் ஏ.எல்.எம்.சில்மி .ஆசிரியை திருமதி ராஹிலா அலியார் ஆகிய இருவரும் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்கள்.மேலும் ஏறாவூர் அல் அஷ்கர் பெண்கள் உயர்தர பாடசாலை ஆசிரியை திருமதி ஜவாஹிரா நையிமுதீன் என்பவரும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

ஒரே பாடசாலையிலிருந்து தெரிவு செய்யப்பட்ட மூன்று ஆசிரியர்களுள் அதிபர் தவிர்ந்த ஏனைய இருவரும் சென்ற வருடமும் இவ்விருதுக்கு தெரிவானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.