Header Ads



தலைமைத்துவமும், சமூகமும் பயிற்சிப்பட்டறை


சமத்துவத்திற்கான யாழ் சிவில் சமூக அமைப்பினால் (துயககயெ ஊiஎடை ளுழஉநைவல கழச நுஙரயடவைல) சிவில் சமூக வலுவூட்டல் நிகழ்ச்சித்திட்டத்தின் முதலாவது பயிற்சிப்பட்டறை 'தலைமைத்துவமும் சமூகமும்' என்ற தலைப்பில் இன்று (2013.10.27) புத்தளம் தில்லையடியில் அமைந்துள்ள ழுர்சுனு கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

தமிழீல விடுதலைப் புலிகளால் வடக்கிலிருந்து முஸ்லிம்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டு 23 வருட பூர்த்தியை அடையாளப்படுத்தும் முகமாகவே இப்பயிற்சிப்கட்டறை இன்று ஏற்பாடு செய்யப்பட்டது என அமைப்பின் இணைநிறுவனரும், நிகழ்ச்சித்திட்டத்தின் பிரதான இணைப்பாளருமான சுஹுத் பஸ்லீம் தெரிவித்தார். 

யாழ்ப்பாணம், புத்தளம் மன்னார் ஆகிய மாவட்டங்களை பிரநிதித்துவப்படுத்தும் பல சமூக ஆர்வலர்கள் இதில் கலந்து கொண்டனர்.

அமைப்பின் தலைவர் ரஹீம்கான் சுவர்க்கஹான், உபதலைவர் முகம்மது இஸ்மாயீல் லியுசீன், இவர்களோடு வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த முஸ்லிம்களுக்கான செயலகத்தின் முன்னால் உதவி ஆணையாளர் அப்துல் மதீன் அவர்ளும் பிரதான அதிதியாக கலந்துகொண்டார்

தகவல்
சுஹுத் பஸ்லீம்
இணைநிறுவனர்




No comments

Powered by Blogger.