Header Ads



மருதமுனை அல்-மதினா வித்தியாலயத்தின் மாணவர் 'ஆற்றல் அரங்கு'

(பி.எம்.எம்.ஏ.காதர்) 

மருதமுனை அல்-மதினா வித்தியாலயம் ஏற்பாடு செய்த தேசிய வாசிப்பு மாத சிறப்பு நிகழ்ச்சயான மாணவர் 'ஆற்றல் அரங்கு' நேற்று (26-10-2013) பாடசாலை முன்றலில் அதிபர் ஏ.ஆர்.நிஹ்மத்துல்லா தலைமையில் நடைபெற்றது.

இதில் அதிதிகளாக சட்டத்தரணி எம்.எஸ்.இஹ்லாஸ்,ஏ.எச்அல்-ஜமாயிர்.ஆகியோர்கலந்துகொண்டனர். இதில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்பட்டன.

மேலும் மருதமுனைக் கலைஞர்களான கலீல்,எஸ்.சகாப்தீன்,எம்.சி.அப்துல் மஜீட்,எம்.ஐ.ஏ.பரீட்,ஆகியோருடன் அல்-மதினா மாணவன் எம்.என்.முகம்மது கனானும் பாடல்களைப் பாடி மாணவர்களை மகிழ்ச்சிப்படுத்தினார்கள்.

ஆத்துடன் எம்.ஜே.அஹாஸ் அஹமட் மெஜிக் செய்துகாட்டி மாணவர்களை உற்சாகப்படுத்தினார். மாணவர்களான எம்.ஆர்.றபா அகமட்,எம்.ஐ.அஹமட் நியாப்,எம்.எம்.பாத்திமா மிஸ்னா,ஏ.எச் பாத்திமா நபா ஆகியோh நிகழ்ச்சிகளை த்தொகுத்த வழங்கினார்கள். 




No comments

Powered by Blogger.