கொழும்பில் உட்பட நாட்டின் சில பகுதிகளில் ஆர்ப்பாட்டங்களுக்கு தடை
எதிர்வரும் மாதம் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் ஆர்ப்பாட்டங்களை நடாத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மற்றும் அதனை அண்டிய முக்கிய நகரங்களில் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள்,பேரணிகள்,பதாகைகளைகளை காட்சிப்படுத்தல் மற்றும் விளம்பரங்கள் உள்ளிட்ட நடவடிக்கைகள் முற்று முழுதாக தடைசெய்யப்பட்டுள்ளது.
இந்த தீர்மானம் பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் அடிப்படையிலே அரசாங்கம் எடுத்துள்ளதுடன் எதிர்வரும் நவம்பர்மாதம் முதல் மூன்று வாரங்களுக்கும் இந்த தடை அமுலில் இருக்கும்.
மேலும் பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்கும் அரச தலைவர்களை பாதுகாக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு திட்டவட்டமாக வலியுறுத்தியுள்ளது.
போராட்டம் நடாத்த தடை விதிக்கப்பட்ட இடங்களான கொழும்பு பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபம், தாமரைத் தடாக அரங்கு, நாடாளுமன்ற வளாகம்,ஹிக்கடுவ,காலி,கண்டி,சிகிரியா மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய இடங்களிலே இத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேற்படி குறித்த பகுதிகளுக்கான பொலிஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. un
.jpg)
Post a Comment