"நோபல் பரிசை விட மக்கள் எனக்கு பல பரிசுகளை வழங்கியுள்ளனர்" மலாலா
"நோபல் பரிசை விட மக்கள் எனக்கு பல பரிசுகளை வழங்கியுள்ளனர் அதுவே பெரிது "என்று பாகிஸ்தான் சிறுமி மலாலா தெரிவித்துள்ளார்.
நோபல் பரிசு கைவிட்டுப் போனது குறித்து மலாலா கூறும் போது, "நோபல் அமைதிப் பரிசுக் குழு என்னை தேர்ந்தெடுக்காதது குறித்து எனக்கு வருத்தம் இல்லை அக்குழுவின் முடிவு மிகச் சரியான முடிவு. காரணம், நான் இன்னும் பல பணிகள் மேற்கொள்ள வேண்டும். மக்கள், எனக்கு அந்த பரிசை வழங்கியுள்ளனர். என்னை அந்த பரிசுக்கு பரிந்துரைத்ததே பெருமையாக கருதுகிறேன். இறுதி வரை பெண் கல்விக்காக உழைப்பேன். என் வாழ்நாளில் இந்த பரிசை நிச்சயம் பெறுவேன்" என்று மலாலா கூறினார்.
அமைதிக்கான நோபல் பரிசுக்கு பாகிஸ்தான் சிறுமி மலாலா, ரஷிய அதிபர் புதின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. ஆனால், உலகில் ரசாயன ஆயுதங்களின் புழக்கத்தைக் கண்காணித்து, தடுக்கும் ஓபிசிடபிள்யூ அமைப்புக்கு இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. inn

Post a Comment