Header Ads



ஹஜ் பயணத்தின்போது அரசியல் கோஷங்களை எழுப்பினால், கடுமையான தண்டனை

சென்ற வருடம் ஹஜ் சமயத்தில் ஏற்பட்ட மெர்ஸ் வைரஸ் நோய்த்தாக்கத்தினால் உலகம் முழுவதும் 58 பேர் இறந்து போனார்கள். அதில் 49 பேர் சவுதி அரேபியாவைச் சேர்ந்தவர்கள் என்பதால் இந்த வருடமும் அதுகுறித்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

காற்றின் மூலம் இந்த வைரஸ் பரவுவதால் யாத்ரீகர்கள் அனைவரும் வாயையும், மூக்கையும் மறைக்கும் துணித்திரையை (மாஸ்க்) உபயோகிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இந்த வருடம் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் நடைபெற்ற சிறிய அளவிலான ஹஜ் யாத்திரைகளிலும், உம்ரா திருவிழா நேரத்திலும் இந்த நோய்த்தாக்கம் ஏற்படவில்லை. ஆயினும் பாதுகாப்பு கருதி சவுதி அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

சிரியா, எகிப்து போன்ற மத்தியக் கிழக்கு நாடுகளில் தோன்றியுள்ள அரசியல் ஸ்திரமற்ற சூழ்நிலையில் இந்த புனிதப் பயணம் நடைபெறுகிறது. எனவே, யாத்ரீகர்கள் ஹஜ் பயணத்தின்போது அரசியல் கோஷங்களை எழுப்பக்கூடாது என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்கள். அவ்வாறு நடைபெறுமேயானால் அவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்படுவார்கள் என்றும் சவுதி அரசு எச்சரித்துள்ளது. இந்த வருடம் 2 லட்சம் யாத்திரீகர்கள் வரக்கூடும் என்று அரசு எதிர்பார்க்கின்றது.

No comments

Powered by Blogger.