Header Ads



அக்கரைப்பற்று கல்வி வலய மாணவர்களுக்கு, ஜனாதிபதி புலமைப் பரிசில் வழங்கும் வைபவம்


(ஏ.ஜி.ஏ.கபூர்)

அக்கரைப்பற்று கல்வி வலயத்திலுள்ள க.பொ.த உயர்தரத்தில் கல்வி கற்கும் உயர்கல்வியைத் தொடர பொருளாதார வசதி குறைந்த மாணவர்களுக்கு நிதி உதவி வழங்கி கல்வித்துறையில் அவர்கள் உயர்வு பெறவும் சிறந்த கல்வி அறிவும் ஆளுமையும் உள்ள நல்ல தலைவர்களாக இன்றைய மாணவர் சமுகம் உயர்ச்சி பெறவும் உதவும் நோக்கில் ஜனாதிபதி நிதியத்தினால் வழங்கப்பட்டுவரும் உயர்தரம் கற்கும் மாணவர்களுக்கான ஜனாதிபதி புலமைப் பரிசில் வழங்குவதற்காக தெரிவு செய்யப்பட்ட நூறு மாணவர்களுக்கு ஜனாதிபதி புலமைப் பரிசில் வழங்கும் வைபவம் இன்று (14.10.2013) திங்கட்கிழமை அக்கரைப்பற்று முனவ்வறா ஜுனியர் கல்லூரியில் கல்லூரி அதிபர் அல்-ஹாஜ் ஏ.ஜி.அன்வர் தலைமையில்  நடைபெற்றது.

நிகழ்வில் பிரதம அதிதியாக அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் அஷ்ஷேய்க் ஏ.எல்.எம்.காஸீம், கௌரவ அதிதிகளாக நிருவாகத்திற்குப் பொறுப்பான  பிரதிக்கல்விப் பணிப்பாளர் ஏ.எஸ்.அஹமட் கியாஸ், கணக்காளர் கே.றிஸ்வி யஹ்ஷர், நிகழ்ச்சித் திட்ட உதவியாளர் எஸ்.ஆர்.ஹுஸைன் மற்றும் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள்,; மாணவர்கள்  கலந்து கொண்டனர்.
 
முதற்கட்டமாக 2011ம் ஆண்டு கல்விப் பொதுத் தராதரப் பத்திரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களுக்கு தலா ஆறாயிரம் (6000.00) ருபா வீதம் நூறு மாணவர்களுக்கு காசோலைகள் வழங்கப்பட்டன.

புலமைப் பரிசிலுக்கான  காசோலைகளை பிரதம அதிதியாகக கலந்து கொண்ட அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் அஷ்ஷேய்க் ஏ.எல்.எம்.காஸீம், கௌரவ அதிதிகளான நிருவாகத்திற்குப் பொறுப்பான பிரதிக்கல்விப் பணிப்பாளர் ஏ.எஸ்.அஹமட் கியாஸ், கணக்காளர் கே.றிஸ்வி யஹ்ஷர் அக்கரைப்பற்று முனவ்வறா ஜுனியர் கல்லூரியில் அதிபர் அல்-ஹாஜ் ஏ.ஜி.அன்வர் ஆகியோர் வழங்கி வைத்தனர்.

அக். ஃ;அஸ்-ஸிறாஜ் மஹா வித்தியாலயம், அக்கரைப்பற்று - 10 பேர்
அக் ஃ மின்ஹாஜ் மஹா வித்தியாலயம் பாலமுனை      - 06 பேர்.
;     அல்-முனீரா ஜீ. எச். எஸ். அட்டாளைச்சேனை    - 04 பேர்
முஸ்லிம் மத்திய கல்லூரி(தே.பா),அக்கரைப்பற்று  - 08 பேர்
அல்-இர்பான் மகளிர் கல்லூரி, பொத்துவில்      - 15 பேர்
அல்-கலாம் வித்தியாலயம், பொத்துவில்         - 14 பேர்
முஸ்லிம் மத்திய கல்லூரி, பொத்துவில்         - 15 பேர்
ஆயிஷா பாளிகா மஹாவித்தி.,அக்கரைப்பற்று    - 09 பேர்
புhயிஷா மஹா வித்தியா.,பள்ளி, அக்கரைப்பற்று   - 04 பேர்
அல்-ஹம்ரா மஹாவித்தியாலயம், ஒலுவில்       - 05 பேர்
அந்-நூர் மஹா வித்தியாலயம், அட்டாளைச்சேனை- 10 பேர்



No comments

Powered by Blogger.