வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறியின் ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தி
(ஏ.எஸ்.எம்.இர்ஷாத்)
இஸ்லாமிய வரலாற்றில் ஹஜ் பெருநாளானது மிக முக்கிய பண்டிகையாக உலகம் முழுவதும் கருதப்படுகின்றது. விசேடமாக சவுதி அரேபியாவில் உள்ள மக்காவில் பிரதான சமய சடங்குகள் நிறைவடைந்த பின் ஹஜ் பெருநாள் உலங்கெங்கிலுமுள்ள முஸ்லிம் மக்களால் கொண்டாடப்படுகின்றது. ஆண்டு தோறும் பல மில்லியன் கணக்கான மக்கள் உலங்கெங்கிலும் இருந்து புனித நகரான மக்கா சென்று தமது ஹஜ் கடமையினை நிறைவேற்றுகின்றார்கள்.
இது தியாகத் திருவிழாவாக கருதப்படுகின்றது. ஒருவர் தமது பெருமை மற்றும் உயர் நிலை என்பவற்றிற்கு கொடுத்த முக்கியத்துவத்தை விடுத்து அனைவரும் எளிய வெள்ளை உடையினை அணிந்து கூட்டாக இணைந்து தீமைகளுக்கு எதிராகவும் நன்மைகள் வேண்டியும் பிரார்த்திக்கும் திருவிழாவே ஹஜ் ஆகும்
தற்போது வடமாகாண முஸ்லிம் மக்கள் அமைதியான சூழலில் ஹஜ் பெருநாளை கொண்டாடுகின்றார்கள். பாரிய பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தி நடவடிக்கைகள் நாடு முழு நடைபெறும் இந்நேரத்தில் மத நல்லிணக்கத்தினை உருவாக்க இப்பெருநாள் முக்கியமானதாக உள்ளது. இவ்வாறான மதச்சடங்குகள் மூலம் நாட்டினை அபிவிருத்தி நோக்கியும் இனங்களுக்கிடையேன பரஸ்பர புரிந்தினர்வினை நோக்கியும் நகர்த்த முடியும்.
வட மாகாண ஆளுநர் என்ற வகையில் முஸ்லிம் மக்களுக்கு ஹஜ் பெருநாள் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சியடைகின்றேன்.

Post a Comment