இலங்கையில் 'ஷரிஆ' சட்டத்தை அமுல்படுத்துங்கள் - அமைச்சர் மகிந்த யாப்பா அபேவர்தன
கசினோ, விபச்சாரம் மற்றும் போதைப் பொருள் விற்பனை என்பன நாட்டில் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வரும் வர்த்தகங்களாக இருப்பதாகவும் இலங்கையில் ஷரியா சட்டத்தை அமுல் படுத்துவதன் மூலம் மட்டுமே அவற்றை தடுத்து நிறுத்த முடியும் என விவசாய அமைச்சர் மகிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.
கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு இலங்கையில் கசினோ, விபச்சாரம் மற்றும் போதைப் பொருள் விற்பனை என்பன பெருகியுள்ளன.
இவற்றை 100 வீதம் தடுத்து நிறுத்த வேணடுமானால் மத்திய கிழக்கு நாடுகளில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஷரியா சட்டம் அமுல்படுத்தப்பட வேண்டும். இல்லாவிட்டால் அவற்றை முற்றாக தடுத்து நிறுத்த முடியாது.
கசினோ வர்த்தகத்தை இலங்கையில் ஊக்குவிக்க அரசாங்கம் விசேடமாக எதனையும் செய்யவில்லை. அங்கங்கே இருக்கும் கசினோ வர்த்தகத்தை ஒரு இடத்திற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளையே அரசாங்கம் எடுத்துள்ளது.
எதிரக்கட்சியான ஐக்கிய தேசியக்கட்சியே இலங்கைக்கு கசினோ சூதாட்டத்தை அறிமுகப்படுத்தி வைத்தது. ஐக்கிய தேசியக்கட்சியின் ஆட்சிக்காலத்தில் வழங்கப்பட்ட அனுமதிப்பத்திரங்களை தவிர அரசாங்கம் புதிதாக எந்த அனுமதிப்பத்திரங்களையும் வழங்கவில்லை என்றார்.
உண்மையை புரிந்து கொண்ட உங்களுக்கு அல்லாஹ் நேர்வழி காட்டுவானக மேலும் உங்களை கொண்டு மேலும் பலருக்கு நேர்வழி காட்டுவானாக
ReplyDeleteஷரீஆ சட்டம் அமுல்படுத்தப்பட்டால் நாடு சீர்பெறும். கொலை செய்தவனைக் கொலை செய்ய வேண்டும். விபச்சாரம் புரிந்தவன் திருமணமானவனாக இருந்தால் அவனைக் கொலை செய்ய வேண்டும். கள்வனின் கை துண்டிக்கப்பட வேண்டும். மது அருந்தியவனுக்கு 40 கசை அடி அடிக்க வேண்டும். இவைகள் முறையாக அமுல்படுத்தப்பட்டால் குற்றக்காரர்கள் வெளியே வருவார்களா? ஒரு வருடம் நிறைவேற்றிப் பார்த்தாலே புரியலாம்.
ReplyDeleteஇன்று நடப்பது என்ன? சிறுவர் துஷபிரயோகமா? கொலையா? கொள்ளையா? விபச்சாரமா? களவா? எந்தக் குற்றக்காரனும் சிறையில் அடைக்கப்பட்டு விNஷட தினங்களில் மன்னிப்பளிக்கப்ட்டு வெளியில் வந்து மீண்டும் அதே தவறில் ஈடுபடுகின்றனரே. வெஸாக் தினத்தில், சுதந்திர தினத்தில், ஜனாதிபதியின் பிறந்த தினத்தில் எத்தனை கைதிகள் வெளியேற்றப்படுகின்றனர்.????