Header Ads



ஹம்பாந்தோட்டை நகரில் ஆர்ப்பாட்டம் (வீடியோ இணைப்பு)

ஹம்பாந்தோட்டை நகரில் மீனவர்கள் இன்று 12-10-2013 முற்பகல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

ஹம்பாந்தோட்டை மீன்பிடி துறைமுகத்தினுள் படகுகள் உட்பிரவேசிக்கும் வேளைகளிலும், துறைமுகத்திலிருந்து வெளியேறும் வேளைகளிலும் ஏற்படும் அனர்த்தங்களைத் தவிர்ப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என வலியுறுத்தி இந்த ஆரப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
ஹம்பாந்தோட்டை மீன்பிடி துறைமுகத்தினூடாக படகொன்று உள்நுழைந்தபோது, நேற்று இடம்பெற்ற அனர்த்தத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த மீன்பிடி துறைமுக நுழைவாயிலின் அமைவில் நிலவுகின்ற அபாய நிலைமை குறித்து கடற்றொழில் அமைச்சரிடம் ஏற்கனவே சுட்டிக்காட்டியிருப்பதுடன், இதுவரை உரிய நடவடிக்கைகள் எவையும் முன்னெடுக்கப்படவில்லை என்றும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள மீனவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கொழும்பு – கதிர்காமம் வீதியின் ஹம்பாந்தோட்டை பகுதியில் வீதியை மறித்து மீனவர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். இதன்போது பொலிஸாருக்கும், ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் அமைதியின்மை நிலவியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.newsfirst.lk/english/node/29793

No comments

Powered by Blogger.