Header Ads



நாட்டிற்காக தியாகம் செய்தவர்கள் நினைவாக ஓட்டமாவடியில் நினைவுத் தூபி

(அனா)

இன்று ஒரு சில சிங்கள அமைப்புக்களின் தலைவர்கள் நாட்டில் இருந்த பயங்கரவாதத்தை ஒழிக்கும் போராட்டததில் முஸ்லீம் சமுகம் எந்த விதப் பங்களிப்பையும் செய்ய வில்லையென்று அப்பட்டமான பொய்ப் பிரச்சாரங்களைச் செய்து வருகின்றனர் இக் கருத்திற்கு எதிராகவும் நமது பிரதேசத்தில் இருந்து நாட்டிற்காக தியாகம் செய்தவர்கள் நினைவாக நினைவுத் தூபி ஒன்று கட்ட வேண்டும் என்று ஓட்டமாவடி பிரதேச சபையின் பிரதி தவிசாளர் ஏ.எம்.நௌபர் (24.10.2013) இடம் பெற்ற பிரதேச சபையின் அமர்வில் பிரேரனை ஒன்றை சமர்பித்தார்.

ஓட்டமாவடி பிரதேச சபையின் 31வது அமர்வு  பிரதேச சபை கேட்போர் கூடத்தில் பிரதேச சபை தவிசாளர் கே.பி.எஸ்.ஹமீட் தலைமையில் இடம் பெற்ற போதே மேற்படி பிரேரனையை பிரதி தவிசாளர் ஏ.எம்.நௌபர் சமர்பித்து உரையாற்றினார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

எமது நாட்டில் கடந்த முப்பது வருடங்களாக இடம் பெற்று வந்த யுத்தம் ஜனாதிபதியின் சிறந்த வழிகாட்டலில் முடிவுற்று நாட்டில் உள்ள அனைத்தின மக்களும் நிம்மதியாக வாழ்வதற்கு வழி வகுத்துள்ளதுஇந்த பயங்கரவாதத்தை ஒழித்து நிறந்தர சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு இராணுவத்திலும் பொலிஸிலும் முஸ்லீம்கள் பலர் உயிர் தியாகம் செய்துள்ளனர் என்பதனை ஜனாதியுதியும் பல சந்தர்ப்பங்களில் நினைவு படுத்தி உள்ளார்.
ஆனால் இன்று ஒரு சில சிங்களத் தலைவர்கள் பயங்கரவாதத்தை ஒழிக்கும் போராட்டத்தில் முஸ்லீம் சமுகம் எந்தவித பங்களிப்பையும் செய்யவில்லையென்று அப்பட்டமாக பொய்ப் பிரச்சாரங்களைச் செய்து வருகின்றது இதனை பாமர சிங்கள மக்களில் ஒரு பகுதியினர் நம்பி முஸ்லீம்கள் தவரானவர்கள் என்ற என்னத்தில் உள்ளனர் அதனால் எங்களால் முடிந்தவரை முஸ்லீம்களும் இந் நாட்டுக்காக தியாகம் செய்யதவர்கள் என்பதை தெளிவு படுத்த வேண்டியது அரசியல்வாதிகள் என்ற வகையில் எமது பொருப்பாகும்.

அந்தவகையில் கல்குடாத் தெகுதியில் இருந்து இராணுவம் மற்றும் பொலிஸில் இருந்து உயிர்த் தியாகம் செய்தவர்கள் நினைவாக நினைவுத் தூபி ஒன்றை அமைத்து அதில் அவர்களது பெயர்களையும் குறிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

பிரதி தவிசாளர் ஏ.எம்.நௌபரது பிரேரனை ஏகமானதாக சபையில் ஏற்றுக் கொள்ளப்பட்டதுடன் நினைவுத் தூபியை நாவலடி (திருக்கொண்டியாமடு) சந்தியில் அமைப்பதென்றும் இது தொடர்பாக பிரதேசத்தில் உள்ள இராணுவம் மற்றும் பொலிஸ் உயர் அதிகாரிகளின் ஆலோசனைகளும் பெறப்பட வேண்டம் என்றும் தீர்மாணிக்கப்படடுள்ளது.

No comments

Powered by Blogger.