சட்டவிரோதமாக வேன் ஒன்றினுள் கொண்டு செல்லப்பட்ட 12 மாடுகள் மீட்பு - சாரதி கைது (படங்கள்)
(ஹனீக் அஹமட்)
சட்டவிரோதமாக வேன் ஒன்றினுள் அடைத்துக் கொண்டு செல்லப்பட்ட 12 மாடுகளையும், குறித்த வாகனத்தினையும் திருக்கோவில் பொலிஸார் நேற்று வியாழக்கிழமையன்று கைப்பற்றினர்.
பொலிஸ் பரிசோதகர் எம்.எச்.எம். ஹசீப் தலைமையில் சென்ற குழுவினர் மேற்படி மாடுகளை வாகனத்துடன் கைப்பற்றியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காஞ்சிரங்குடா சந்தியில் வைத்து மேற்படி வேன் மற்றும் அதனுள் அடைத்து வைக்கப்பட்டிருந்த மாடுகளை பொலிஸார் கைப்பற்றினர்.
குறித்த இடத்துக்கு பொலிஸார் செல்லும் போது, வேன் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்டதாகவும், வேனில் பயணித்தோர் தப்பிச் சென்று விட்டதாகவும் திருக்கோவில் பொலிஸார் கூறினர்.
கைப்பற்றப்பட்ட வேன் மற்றும் மாடுகள் - தற்போது திருக்கோவில் பொலிஸ் நிலைய வளாகத்தில் உள்ளதாக அறிய முடிகிறது.
சிறிய வேன் ஒன்றினுள் - இவ்வாறு அதிகளவான 12 மாடுகளை அடைத்துக் கடத்த முற்பட்டமையானது தமக்கு ஆச்சரியத்தைத் தருவதாகவும், இது மனிதாபிமானமற்ற செயல் எனவும் கூறிய பொலிஸார் - முதன் முறையாக - இவ்வாறானதொரு சம்பவத்தை தாம் சந்தித்துள்ளதாகவும் கூறினர்.



இவர்களைப்போன்ற இறக்கமற்றவர்களால் தான் BBS போன்றவர்கள் உருவாகிறார்கள்.
ReplyDelete