குவைத்தில் துன்புறுத்தலுக்கு இலக்கான இலங்கை பெண், நாடு திரும்பினார்
குவைத்தில் துன்புறுத்தலுக்கு இலக்கான மற்றுமொரு பணிப்பெண் நாடு திரும்பியுள்ளார். கட்டான பகுதியிலிருந்து குவைத்தில் தொழிலுக்குச் சென்ற 50 வயதான பணிப் பெண்ணே இலங்கையை வந்தடைந்துள்ளார்.
50 வயதான இவர் இரண்டு வருடங்களுக்கு முன்னர் தனியார் வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர் நிலையம் ஒன்றின் ஊடாக குவைத்துக்கு சென்றிருந்தார்.
பணியாற்றிய வீட்டிலிருந்த சிறுவன் ஒருவர் மேற்கொண்ட தாக்குதலில் தமது கண்ணில் காயம் ஏற்பட்டதாக பாதிக்கப்பட்ட பெண் கூறினார்.
இந்த சம்பவம் தொடர்பில் வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தின் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொது முகாமையாளருமான மங்கள ரன்தெனியவிடம் வினவியபோது, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நலன்புரித் திட்டத்தின்கீழ் சிகிச்சைகளுக்கான நிதி உதவி வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Post a Comment