Header Ads



கல்முனை மேயர் கயிறிழுப்பில் வெற்றிபெறுவது யார்..? ரவூப் ஹக்கீமுக்கு நெருக்கடி..!

(சுஐப் எம். காசிம்)

கல்முனை மேயர் பதவி விவகாரம் தொடர்பாக தற்போது எழுந்துள்ள சர்ச்சை சூடுபிடித்துள்ள நிலையில் மேயர் சிராஸ் மீராசாஹிப் பதவி விலகுவாரா? இல்லையா? என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக எழுந்துள்ளது.

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் கல்முனை மாநகர சபைக்கென இடம்பெற்ற தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 11 ஆசனங்களைக் கைப்பற்றி ஆட்சியை தன் வசமாக்கியது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 4 ஆசனங்களையும் ஐ. ம. சு. முன்னணி 3 ஆசனங்களையும் ஐ. தே. க. ஒரு ஆசனத்தையும் இத்தேர்தலில் பெற்றுக் கொண்டன. ஆட்சியைத் தனதாக்கிக் கொண்ட முஸ்லிம் காங்கிரஸில் அதிகூடிய வாக்குகளைப் (16, 457) பெற்ற சிராஸ் மீராசாஹிப் மேயராகவும் அதற்கடுத்த வாக்குகளைப் (13, 948)பெற்ற சட்டத் தரணி நிசாம் காரியப்பர் பிரதி மேயராக வும் நியமிக்கப்பட்டனர்.

எனினும் அப்போதும் மேயர் தெரி வில் சில சர்ச்சைகள் எழுந்தன. வீதி மறியல் போராட்டங்கள் கடையடைப்பு போன்ற சம்பவங்களும் அந்தப் பிரதேசத்தில் இடம்பெற்றன.

தேர்தல் முடிவுகள் வெளிவந்தவுடன் மேயராக சிராஸ் மீரா சாஹிப் தெரிவு செய்யப்பட வேண்டுமென்று ஒரு சாராரும் சட்டத்தரணி நிசாம் காரியப் பரே தெரிவு செய்யப்பட வேண்டு மென்று இன்னுமொரு சாராரும் அழுத் தங்கள் கொடுத்ததனால் கட்சித் தலைமை இவ்விருவரும் தலா இரண்டு வருடங்கள் பதவி வகிப்பர் என முடிவெடுத்தது.

கல்முனை மேயராக சிராஸ் மீரா சாஹிப் தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்ற அறிவிப்புப் பின்னர் வெளியாகி இருந்தது. எனினும் கனவான் ஒப்பந் தத்தின் படி சிராஸ் மீரா சாஹிப் இரண்டு வருடங்களுக்கும் சட்டத்தரணி நிசாம் காரியப்பர் இரண்டு வருடங் களுக்கும் பதவி வகிப்பர் என கட்சித் தலைமை அறிவித்தது.

மேயர் சிராஸின் பதவிக் காலம் இரண்டு வருடம் இப்போது முடி வடைந்த நிலையில் சிராஸ் மீரா சாஹிப் பதவி விலக வேண்டுமென கட்சித் தலைவர் ரவூப் ஹக்கீம் அழுத்தமான தொனியில் தெரிவித் துள்ளார். மேயர் சிராஸ¤க்கும் கட்சித் தலைவருக்கும் இடையிலான சந்திப் பின் போது இது வலியுறுத்தப்பட்டு பதவி விலகலுக்கான காலக்கெடுவும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் தலைவர் ரவூப் ஹக்கீ முக்கும் மு. கா. கல்முனை மாநகர சபை உறுப்பினர்களுக்குமிடையிலான சந்திப்பிலும் சிராஸ் பதவி விலக வேண்டுமென்பதில் தலைவர் ஹக்கீம், தனது உறுதியான நிலைப்பாட்டை மீண்டும் வெளிப்படுத்தினார். எனினும் மாநகர சபை உறுப்பினர்களான எம். ஐ. எம். பிர்தெளஸ், நிசார்தீன் ஆகியோர் தலைவரின் நிலைப்பாட்டுக்கு மாற்றமாக தங்கள் கருத்தை வெளிப்படுத்தி மேயர் தொடர்ந்தும் பதவியில் இருக்க வேண்டுமென வலியுறுத்தினர். அதற்கான நியாயங்களையும் சுட்டிக்காட்டினர்.

இந்தக் கூட்டத்தில் பிரதி மேயர் சட்டத்தரணி நிசாம் காரியப்பர், எம்.பிக்களான பைசல் காசிம், எம். எஸ். தெளபீக் ஆகியோர் பங்கேற்றபோதும் பாராளுமன்றத்தில் இருந்த கல்முனை தேர்தல் தொகுதியைப் பிரதிநிதித்துவப் படுத்தும் ஹரீஸ் எம்.பி. பங்குபற்றாமை குறித்து தலைவர் ஹக்கீம் தனது கண்டனத்தையும் கவலையையும் வெளியிட்டதாக செய்திகள் வெளிவந்தன. எனினும் தனக்கு எந்தவிதமான உத்தியோகபூர்வ அழைப்பிதழ்களோ, கோரிக்கைகளோ வரவில்லை என ஹரீஸ் எம்.பி. தெரிவித்தார். மாகாண சபையில் கல்முனை தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஜெமீலுக்கும் எந்த அழைப்பும் இல்லையென அவர் தெரிவித்தார். கூட்டத்தில் சில எம்.பிக்கள் பங்கேற்றிருந்த நிலையிலே ஏற்பட்டாளர்கள் தன்னைத் தேடியதாகவும் எனினும் தாம் அந்த வேளையில் பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் இருக்கவில்லை எனவும் அவர் உறுதியாக தெரிவித்தார். இந்த விடயத்தில் தனக்கு எத்தகைய உள்நோக்கமும் இல்லையெனவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை பிரதி மேயர் சட்டத்தரணி நிசாம் காரியப்பரிடம் இது தொடர்பில் கேட்டபோது :-

இரண்டு வருட காலம் சிராஸ¤க்கும் எஞ்சிய இரண்டு வருட காலம் எனக்கும் என்பது கட்சி எடுத்தமுடிவு. அதனை தலைமை அப்போது தெளிவாக அறிவித்தது. மசூரா அடிப்படையில் மேற்கொண்ட இந்த முடிவுக்கு அனைவரும் கட்டுப்பட்டனர். ஏற்றுக் கொண்டனர். இந்தக் காலகட்டத்தில் கல்முனை பிரதேச மக்கள் எந்த அதிருப்தியையும் தெரிவிக்கவுமில்லை. தமக்கு இந்த உடன்பாட்டில் இணக்கப்பாடில்லையென ஒருவார்த்தை தானும் வெளிப்படுத்தவுமில்லை. கல்முனை மேயர் இப்போது ஏதோ ஒரு சக்தியினால் தூண்டப்படுகின்றார் என்றே சந்தேகப்பட வேண்டியுள்ளது. கட்சியின் முடிவுக்குக் கட்டுப்பட்டு உரிய முறையில் காரியங்கள் நடைபெற வேண்டும், இதுவே என் விருப்பம் என்றார். மாநகர மேயர் பதவி தனக்கு கிடைத்தால் நான் சபையை சிறப்பாக வழிநடத்துவேன் என்றும் குறிப்பிட்டார்.

எனினும் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை சாய்ந்தமருது மக்களைச் சந்தித்த மேயர் சிராஸ் இந்த விவகாரம் தொடர்பில் மக்களின் கருத்துக்களைக் கேட்டறிந்தார். பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை பிரதிநிதிகள், ஊர்ப்பிரமுகர்கள், புத்திஜீவிகள் மற்றும் பல்வேறு தரப்பினரிடமும் அவர் ஆலோசனை பெற்றார்.

மேயரைப் பதவி விலக வேண்டாமெனவும் போராட்டத்தின் மத்தியில் பெற்றுக் கொண்ட இந்தப் பதவியை அழுத்தங்களுக்கு பயந்து தாரைவார்த்தால் ஊருக்கு வரவேண்டாமெனவும் சிராஸ¤க்கு கூறியதாக மேயருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன. மேயராகப் பணிபுரிவதற்கே மக்கள் அதிகூடிய விருப்பு வாக்குகளை வழங்கினரென்றும் இரண்டு வருட காலத்தில் விலகவல்ல எனவும் அவர்கள் தெரிவித்ததாகவும் மேயருக்கு நெருக்கமானவர்கள் குறிப்பிடுகின்றனர்.

இது இவ்விதமிருக்க மேயராக சிராஸே தொடர்ந்தும் பதவி வகிக்க வேண்டுமென்ற வாசகங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்கள் சாய்ந்தமருது எங்கும் ஒட்டப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கல்முனை மேயர் பதவியிலிருந்து சிராஸ் மீராசாஹிப் இராஜினாமா செய்வார் என மு. கா. தலைவர் ஹக்கீம் பெரிதும் நம்பிக்கை வைத்துள்ள நிலையில் அவர் இராஜினாமாச் செய்வதற்கான சாத்தியக்கூறுகள் அறவே இல்லையென்றே அரசியல் வட்டாரங்களிலிருந்து தெரிய வருகின்றது. 

எத்தகைய பிரச்சினைகளையும் தாங்கள் எதிர்கொள்ள தயாராக உள்ளதாகவும் சாய்ந்தமருது முக்கியஸ்தர்கள் தெரிவிக்கின்றனர். இதேவேளை மு. கா. தலைவர் தனது முடிவை மீள் பரிசீலனை செய்ய வேண்டுமென்பதே தனது ஆதங்கமெனவும் எனினும் கட்சியின் கட்டுப்பாட்டுக்கு தான் மதிப்பளிப்பதாகவும் மாநகர சபை உறுப்பினர் பிர்தெளஸ் தெரிவித்தார்.

3 comments:

  1. சாய்ந்தமருது மக்களுக்கு ஒரு சத்திய சோதனையை இறைவன் இந்த மேயர் விடயமாக முன்வைத்துள்ளான். இறை அச்சமுள்ள சாய்ந்தமருது மக்கள் சகோதரர் சிராஜிடம் கொடுத்த வாக்கை நிறைவேற்றுமாறு புத்திமதி கூற வேண்டும். அப்படி தவறும் பட்சத்தில் சாய்ந்தமருதுக்கும் அதன் வருங்கால சந்ததியினருக்கும் ஒரு கரும் புள்ளியாகவே இந்த விடயம் அமையும்.

    ReplyDelete
  2. Put tail or Head and see who got more greedy? and make that man as Mayer of greedy. and let this open the way for another crack in useless SLMC, finally no more SLMC to sell Muslim votes to buy Ministor post for Mr. Rauf Hakeem and his jokers

    ReplyDelete
  3. colombil arikkai widuwathillai kandyilum wadakkilayumtan ini wadakkukku poka wendiya awasiyam illai terthal mudinthu wittathu

    ReplyDelete

Powered by Blogger.