Header Ads



மக்கள் புரட்சியை திரிவுபடுத்த உண்மைக்கு புறம்பான செய்திகள் - சஜித் கவலை

(nf) மாதுளுவாவே சோபித்த தேரரின் தலைமையில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, கரு ஜயசூரிய மற்றும் சஜித் பிரமதாஸ ஆகியோருக்கு இடையில் பேச்சுவர்த்தையொன்று நடைபெறவுள்ளதாக அச்சு ஊடகமொன்றில் வெளியான செய்தி உண்மைக்குப் புறம்பானது என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸ தெரிவிக்கின்றார்.

ஐக்கிய தேசியக் கட்சி தொடர்பான பேச்சுவார்த்தையொன்று பொல்வத்த விஹாரையில் இன்று நடைபெறவுள்ளதாக அதில் தான் கலந்துகொள்வதாகவும் அச்சு ஊடகமொன்றில் இன்று செய்தியொன்று பிரசுரிக்கப்பட்டுள்ளதாகவும் சஜித் பிரேமதாஸ குறிப்பிடுகின்றார்.
மாதுளுவாவே சோபித்த தேரரின் தலைமையில் இன்று நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்படும் பேச்சுவார்த்தை குறித்து எந்தவொரு தகவலையும் தான் இதுவரை அறிவிக்கவில்லை எனவும் அவ்வாறான பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளும் எண்ணம் தனக்கு இல்லையெனவும் அவர் தெரிவிக்கின்றார்.

நாட்டில் இன்று முன்னெடுக்கப்பட்டுவரும் மக்கள் புரட்சியை திரிவுபடுத்தும் வகையில் அடிப்படையற்ற தகவல்களைக் கொண்ட உண்மைக்கு புறம்பான செய்தியாக இது அமைந்துள்ளதாகவும் சஜித் பிரேமதாஸ சுட்டிக்காட்டியுள்ளார்.

மாதுளுவாவே சோபித்த தேரரின் தலைமையில் நடைபெறவுள்ளதாக கூறப்படும் பேச்சுவார்த்தையில் தானும் கலந்துகொள்வதாக தெரிவிக்கப்படும் கருத்துக்கள் வருத்தமளிப்பதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸ மேலும் தெரிவிதுள்ளார்.

No comments

Powered by Blogger.