Header Ads



மொழி மூல தேசியமட்ட புள்ளிகளை ஏக காலத்தில் வெளியிட நடவடிக்கை எடுக்கவேண்டும்

(எம்.எம்.ஏ.ஸமட்)

தரம் -5 புலமைப் பரிசில் பரீட்சையின்  தமிழ் மொழி மூல தேசியமட்ட நிலையையும்  ஏக காலத்தில் வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டுமென இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் இலங்கைப் பரீட்சைகள் திணைக்களத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பில் இலங்கை இஸ்லாமிய ஆசிரயர் சங்கத்தின் தலைவர் எம். அனஸ் பரீட்சைகள் திணைக்கள ஆணையாளருக்கு அனுப்பி வைத்துள்ள கோரிக்கை அடங்கிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது

ஆண்டு தோறும் பாடசாலை மாணவர்களுக்காக நடாத்தப்படும் தரம் -5 புலமைப் பரிசில் பரீட்சை, க.பொ.த சாதாரணதரப் பரீட்சை மற்றும் உயர்தரப் பரீட்சைகளின் பெறுபேறுகள் வெளியிடப்பட்டு, சில நாட்களில் தேசிய மட்டத்தில் முதல் 10 இடங் களைப் பெற்ற மாணவர்களின் பெயர்ப்பட்டியலும் வெளியிடப்பட்டு வருகின்றது. இதன்போது சிங்கள மொழிமூல மாணவர்களின் பெறுபேறுகள் மாத்திரமே வெளியிடப் படுவது வழமையாகி விட்டது.

அது மாத்திரமின்றி, தேசிய மட்டநிலை, பெறுபேறுகள் வெளிவந்து 24 மணி நேரத் திற்குள் தெரிவானவர்கள் ஜனாதிபதியினால் கௌரவிக்கப்படுவதும், தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள தெரிவுசெய்யப்பட்ட நாடுகளுக்கு சுறு;றுலா சென்றுவருவதும் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஆயினும், இத்தகைய எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தமிழ் மொழி மூல மாணவர் களின் தேசிய மட்ட நிலைகள் வெளியிடப்படுவதில்லை. ஆண்டுதோறும், அனைத்து தேசிய மட்டப் பரீட்சைகளிலும் தொடரும் இந்நிலைமையானது இம்மொழி மூல மாணவர்களுக்கு செய்யும் பெருந்துரோகமாகும். சமத்துவம், சமவாய்ப்பு என்று பேசிக் கொண்டு இந்நிலைமையைத் தொடர விடுவது பெரும் அநீதியாகும்.

குறிப்பாக, இறுதியாக வெளியிடப்பட்ட க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் விடயத்திலும் இந்நிலைமை காணப்பட்டது. அப்பெறுபேறுகள் வெளியிடப்பட்டு, 24 மணிநேரத்திற்குள் சிங்கள மொழிமூல தேசிய மட்டநிலைகள் மாத்திரம் வெளியிடப் பட்டு, அவர்கள் அலரிமாளிகைக்கு அழைக்கப்பட்டு ஜனாதிபதியினால் பாராட்டப் பட்டமை தாங்களும் அறிந்ததே.

இந்தநிலை தமிழ்மொழிமூல மாணவர்களிடையே பெரும் பாதிப்பையும், மன உழைச் சலையும் உண்டு பண்ணும் என்பதில் இருவேறு கருத்திற்கு இடமில்லை. என்பதை யும் தாங்கள் நன்கு அறிவீர்கள்.

இன,மத,மொழி வேறுபாடுகளுக்கப்பால், நீதியாகவும், நேர்மையாகவும், விணைத் திறனாகவும் செயற்பட்டு. குறித்த காலத்திற்கு முன்னதாகவே பெறுபேறுகளை வெளியிட்டு சாதனை படைத்துவரும் தங்களது நிர்வாகத்தின்கீழ் இப்படியானதொரு நிலைமை ஏற்படுவது எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

எனவே, இந்நிலைமைகளைக் கருத்திற் கொண்டு. இம்முறையாவது. தமிழ்மொழிமூல பெறுபேறுகளின் தேசியமட்ட நிலைகளையும் உடனடியாக வெளியிட்டு, அவர்களும் கல்வியில் சமவாய்ப்பையும், அனைத்து வகையான பாராட்டுதல்களையும் பெற்றுக் கொள்ள வழியேற்படுத்துமாறு கோரிக்கை விடுப்பதாக அவர் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளமையானது குறிப்பிடத்தக்கது.


No comments

Powered by Blogger.