மட்டக்களப்பில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் ஆரம்பிக்கப்படுகிறது
(எம்.எம்.ஏ.ஸமட்)
கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சினால் நிர்மாணிக்கப்பட்ட மட்டக்களப்பு வலையிறவுப் பாலம் மக்களின் பாவனைக்காக (28-10-2013) திறந்து வைக்கப்படுவுள்ளது
கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் 310 மில்லியன் ரூபா நிதியில் மட்டக்களப்பு மாவட்டத்தின் வலையிறவு, ஆயித்திய மலை பிரதேசங்களின் பிரதான வீதியில் அமைக்கபட்ட இரு பாலங்களும், கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் மாகாணப்பணிப்பாளர் புதிய கட்டடத் தொகுதி மற்றும், மட்டு. மாவட்ட வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் பிரதம பொறியியலாளர் காரியாலயம் என்பன இதன் பொது வைபரீதியாக திறந்து வைக்கப்படவுள்ளன.
யுத்தம் முடிவுற்றதன் பின்னர் ஜனாபதியின்; வழிகாட்டலின் பிரகாரம்; கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் துரித அபிவிருத்திப்பணிகளில் இவை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தனெ கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ். உதுமாவெப்பை குறிப்பிட்டார்.
யுத்த சூழலினால்; மிகவும் பாதிக்கபட்டிருந்த தமிழ் பிரதேசங்களான வலையிறவு, ஆயித்திமலை மக்களுக்கு இப்பாலங்கள் அமையப்பெற்றிருப்பது வரப்பிரசாதமாகும். இதனால் இம்மக்களின் போக்குவரத்து மற்றும் கல்வி, கலாசார, பொருளாதார வளர்ச்சி என்பனவற்றை மேம்படுத்த முடியும்.
இதேவேளை மட்டு;. வலையறவு, ஆயித்திமலை பிரதேசங்களில் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சினால் சுமார் 404 மில்லியன் ரூபா நிதியொதுக்கீட்டில் அமைக்கப்பட்டு வரும் கொங்ரீட், காபட் வீதிகளும் விரைவில் மக்கள் பாவனைக்காக கையளித்து வைக்கபடவுள்ளன.
இத்திறப்பு விழா வைபவங்களில் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பையின் அழைப்பின் பேரில் பிரதம அதிதிகளாக உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லா, கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீட் ஆகியோருடன் கிழக்கு மாகாண அமைச்சர்கள், கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், ஜனாபதி ஆலோசகருமான எஸ்.சந்திரக்காந்தன், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள், வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் உயரதிகாரிகள், ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கைக்கான பிரதிநிதி உள்ளிட்ட பலர் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது..

Post a Comment