மீனவர்களுக்கு தொழில்பயிற்சி
(எம்.எம்.ஏ.ஸமட்)
மீனவர்களுக்கு தொழில்பயிற்சி வழங்க சமுத்திர வள அபிவிருத்தி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
மீனவர்களின் உயிர் பாதுகாப்பு மற்றும் நவீன மொழில்நுட்பப் பொறிமுறை தொடர்பாக வழங்கப்படும் இத் தொழில் பயிற்சியில் பங்குகொள்ளுவோர் பயிற்சியை வெற்றிகரமாக பூர்த்தி செய்வார்களாயின் அவர்களுக்கு சான்றிதழ்; வழங்கப்படுமென அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இப்பயிற்சின் பயனாக நவீன தொழில் நுட்பங்களை மீனவர்கள் பெற்றுக்கெர்ள்ளக் கூடியதாக இருக்கும். அத்துடன், மீன்பிடி நடவடிக்கையின் போது, நவீன தொழில்நுட்பங்களை பிரயோகிக்கவும் நவீன மீன்பிடி உபகரணங்களைப் பயன்படுத்தவும் இப்பயிற்சிகள் வழிவகுப்பதுடன் உயிர் பாதுகாப்பு மற்றும் படகுகள் வள்ளங்கள் என்பவற்றை திருத்தவும் கடல் விபத்துக்களைக் குறைக்கவும் உதவும்.
இப்பயிற்சிகள் 'சினெக்' எனவும் நிறுவனத்தில் நடைபெறவுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அமைச்சு இலங்கையின் பொருளாதாரத் துறையில் முக்கிய பங்குவகிக்கும் மீன்பிடித்துறையை விருத்தி செய்யவும் மீனவர்களின் நலன்களைப் பேனவும் மீன்பிடி இத்தொழில் ஈடுபட்டுள்ளோரின் தொழில்வாண்மையை விருத்தி செய்யவும் அரசு பல நடவடிக்கைகளை முன்னெடுத்திருப்பதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது

Post a Comment