Header Ads



கெசினோ தொடர்பாக விவாதத்திற்கு வருமாறு சவால்

கெசினோ வர்த்தகம் தொடர்பாக தம்முடன் விவாதத்திற்கு வருமாறு ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா முதலீட்டு அபிவிருத்தி அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவுக்கு சவால் விடுத்துள்ளார்.

கொழும்பில் 14-10-2013 இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய ஹர்ஷ டி சில்வா திறந்த விவாதத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.

இது தொடர்பில் முதலீட்டு அபிவிருத்தி அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவிடம் வினவியபோது, களியாட்ட மற்றும் வினோத நடவடிக்கைகளுக்கு மாத்திரமே அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவித்தார். கசினோ அங்கு ஆரம்பிக்கப்படுவதற்கு தாம் அனுமதி எதனையும் வழங்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். sfm

No comments

Powered by Blogger.