Header Ads



அவுஸ்திரேலியாவிலிருந்து 40 இலங்கையர்கள் திருப்பிவந்தனர்

(nf) அவுஸ்திரேலியாவிற்கு சட்டவிரோதமாக சென்று, அங்கு புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட 40 பேர் 14-10-2013இலங்கைக்கு திருப்பியனுப்பப்பட்டுள்ளனர்.

இவர்களில் 12 பெண்களும், 08 சிறார்களும் அடங்குவதாக பொலிஸ் பதில் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.

இவர்கள் கடந்த மாதம் 7 ஆம் திகதி படகு மூலம் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவிற்கு சென்றுள்ளதாக பொலிஸ் பதில் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.