யாழ்ப்பாணத்தில் முஸ்லிம் மாணவர்கள் மீது தாக்குதல் - தாடி வைத்திருந்ததே காரணம்
(பா.சிகான்)
யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் வைத்து முஸ்லீம் மாணவர்கள் சிரேஸ்ட மாணவர்களின் தாக்குதலினால் காயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இச்சம்பவம் இன்று மாலை 3 மணியளவில் நடைபெற்றுள்ளதுடன் தாக்குதலில் காயமடைந்த மாணவர்கள் 3 பேரும் உளப்பாதிப்படைந்த நிலையினை காணமுடிந்தது.
வழமை போன்று விரிவுரைகளை முடித்தவிட்டு தங்களது இருப்பிடத்திற்கு திரும்பிக் கொண்டிருக்கையில் திடிரென இடைமறித்த 4 ம் வருட கலை பீட மாணவர் குழு 1 வருட முஸ்லீம் மாணவர்களை கடுமையாக தாக்கியுள்ளது.
இத்தாக்குதல் ஏற்கனவே பகிடிவதை என்று கூறி தாக்கப்பட்ட போதிலும் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் முஸ்லீம் மாணவர்கள் என்ற ரீதியில் இனக்குரோதத்துடனும், தாக்குதலில் ஈடுபட்டதாக தாக்குதலில் காயமடைந்த மாணவர்கள் குறிப்பிட்டனர்.
மேலும் இத்தாக்குதலில் கலைப்பிடத்தைச் சேர்ந்த 1 வருட முஸ்லீம் மாணவர்களான எப்.எம் அம்ஜத் (வயது 22) புத்தளம் -கல்பிட்டி,ஏ.எம். பௌசான்(வயது-22)குருநாகல்-வல்பொதுவெல,ஐ.எம் பஹ்மி (வயது -21)(வவுனியா –பாவற்குளம்;) ஆகியோர் கன்னம்,மூக்கில் காயமடைந்த நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இத்தாக்குதலுக்கு பிரதான காரணமாக 1 வருட மாணவர்கள் தாடி வளர்த்த நிலையில் அதற்கான தெளிவான இஸ்லாம் மார்க்க விளக்கம் சிரேஸ்ட மாணவர்களுக்கு வழங்கப்படாமையினால் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் காணமடைந்த மாணவர்கள் உடனடி தீர்வு இதற்கு தராத பட்சத்தில் பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியேறி செல்வதாக தெரிவித்துள்ளனர்.
தாக்குதலில் காயமடைந்த மாணவர்கள் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் பொலிஸில் முறைப்பாடும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்படி தாக்குதலில் காயமடைந்த மாணவர்கள் தெரிவித்ததாவது
கடந்த சில தினங்களாக எம்மை போன்ற 4 முஸ்லீம் மாணவர்களுக்கு தாடி வளர்த்த ஒரே காரணத்திற்காக மிக கடுமையாக தாக்கப்பட்டனர். இது தொடர்பாக ஒழுக்காற்று அதிகாரிக்கு (மார்சல்) தெரியப்படுத்தியும் எதுவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.ஆனால் இன்றும் எம்மீது தாக்குதல் தொடுக்கப்பட்டுள்ளது.இதனால் உள ரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டுள்ளோம்.
மேலும் தற்போது கல்வி கற்கும் சூழ்நிலை பாதிக்கப்பட்டுள்ளது.காது சரிவர கேட்கவில்லை.வாயினால் தொடர்ந்து இரத்தம் கசிந்த வண்ணம் உள்ளது.இதற்காகவா நாங்கள் யாழ் பல்கலைக்கழகத்திற்கு வந்தோம் என ஆதங்கத்துடன் குறிப்பிட்டனர்.
இச்சம்பவம் தொடர்பாக பல்கலைக்கழக நிர்வாகம் பராமுகமாக செயற்படுவதாக மாணவர்கள் மத்தியில் பேசப்படுகிறது.

புலிகளின் வாரிசுகள் இன்னமும் இருக்கின்றார்கள்.
ReplyDeleteஅஸ்மின் அய்யூப் அவர்கள் நேரடியாக இதில் தலையிட்டு நீதி கிடைக்க வழி செய்ய வேண்டும். முஸ்லிம் சமூகம் அவரிடம் இதனை எதிர்பார்க்கின்றது.
எல்லா சமூகங்களிலும் நல்லவர்களும் கெட்டவர்களும் இருக்கிறார்கள். இதை நீதியான முறையில் அணுகுவோம்... நபிகளாரின் பொறுமையை கடைபிடிப்போம்.நாமும் தமிழர்கள் என்பதை காலம் அவர்களுக்கு சொல்லும்.. எந்த விடுதலையும் இலகுவில் கிடைபதில்லை...
ReplyDeleteஎனவே பொறுமையோடு இருப்போம் எம்மை எதிர்பவர்களோடு அன்பாகவும் மரியாதையாகவும் நடப்போம்....
நாம் ஷைத்தானின் இலக்கிலிருந்து பாதுகாப்பாய்யிருப்போம்..