நேரடி மோதலில் ஈடுபட்ட அரசியல்வாதிகள் இருவருக்கு காயம்
(Adt) பெந்தோட்டை பிரதேச சபையின் தலைவர் மற்றும் உப தலைவருக்கு இடையில் ஏற்பட்ட மோதலையடுத்து, இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று முற்பகல் 10.15 அளவில் பெந்தோட்டை பிரதேச சபையில் வைத்து இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் காயமடைந்த பிரதேச சபைத் தலைவர் கயான் சிறிமான்ன பலபிடிய வைத்தியசாலையிலும், உப தலைவர் ரஞ்சித் விக்ரமசிங்க நாகொட வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் இரு தரப்பினராலும் முறையிடப்பட்டதையடுத்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
.jpg)
Post a Comment