Header Ads



முஸ்லிம்களுடன் சேர்ந்து முன்னேற வேண்டும் என்பதை ஆணித்தரமாக முன்வைக்கின்றேன் - விக்னேஸ்வரன்


வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் ஒன்று சேர்ந்து பாரிய மாற்றத்தை ஏற்படுத்த முன்வர வேண்டும் என வடக்கு மாகாண சபை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அழைப்பு விடுத்துள்ளார்.

யாழ் முஹம்மதியா ஜும்மா பள்ளிவாசலில் நேற்று சனிக்கிழமை  மாலை 4.30 மணியளவில் மௌலவி எம்.ஐ. மஹ்மூத்தால் நடத்தப்பட்ட துஆ பிரார்த்தனையில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இந்த அழைப்பை விடுத்திருந்தார். அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

முஸ்லிம் மக்களுடன் சேர்ந்து முன்னேற வேண்டும் என்ற கருத்தை நான் ஆணித்தரமாக முன் வைக்கின்றேன். மத வேற்றுமை இருந்த காலம் மாறி மனிதர்கள் மனிதர்களாக வாழ விரும்புகின்றனர். அது இஸ்லாமியருக்கு நடந்த கொடுமை என இந்துவும் இது இந்துவுக்கு நடந்த கொடுமை என இஸ்லாமியரும் கண்ணை மூடிக்கொண்டு இருக்காமல் அது யாருக்கு நடந்தாலும் அதனை நாம் தட்டிக் கேட்க வேண்டும்.

இறைவன் மீது நம்பிக்கை கொண்டோர் மனிதாபிமானம் கொண்டவர்கள் ஒன்று சேரவேண்டிய தேவை வந்துள்ளது. அதற்கான காலம் கனிந்துள்ளது.

முல்லைத்தீவுக்கு அமைச்சு கொடுக்கவில்லை என்று ஒரு சர்ச்சை கிளம்பியுள்ளது ஆனால் நாம் முல்லைத்தீவில் முதன்மை வேட்பாளராக போட்டியிட்ட அன்ரன் ஜெகநாதனுக்கு புனர்நிர்மாணம், மக்கள் இணக்கப்பாடு, மீள் குடியேற்றம், என்பது தொடர்பான அமைச்சு பொறுப்பினை அவரிடம் கொடுக்க தீர்மானித்துள்ளோம்.

அதேவேளை முஸ்லிம் மக்கள் அலகு பற்றிய விடயங்களை பார்க்கும் பொறுப்பு அஸ்மினிடம் கொடுக்க உள்ளோம். அதேபோலவே மாகாண சபையில் உள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் அனைத்து உறுப்பினர்களுக்கு ஏதோ ஒரு அமைச்சு தொடர்பான அதிகாரங்களை கொடுக்க உள்ளோம்.

அதாவது குறித்த அமைச்சர்களுக்கு கீழ் இவர்கள் பொறுப்பாக இருந்து அந்த அமைச்சு தொடர்பாக பொறுப்பாக பார்த்து கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்தார்.

2 comments:

  1. அதாவது முஸ்லிம்களும் எல்லாவற்றையும் எந்த இழப்பீடும் பிராயசித்தமும் பெறாமல் தாமாகவே முன் வந்து மறந்து தமிழர்களாகி தமிழர்களை தங்கள் பிரதிநிதிகளாக்கி அழகுபார்க வேண்டுமா? முஸ்லிம்களின் பங்கையும் தமிழர்கள், முஸ்லிம்களும் தமிழர்களே என்ற போர்வையில் ஆண்டு அனுபவிக்க முஸ்லிம்கள் முன் வரவேண்டுமா?

    ReplyDelete
  2. muslimkal muslimkalaaha illathathaal thaan ivvalavu pirachinaihalum, ippa ulahathukaaha enna vendumaanaalum seivaarhal. yaarthaan ippa pallikul pohala, aamathuru, kurukal ellaarum ippa pallikul poraanga, ithuthaan ippa muslimgal nilaipaadu

    ReplyDelete

Powered by Blogger.